

ஆப்பிரிக்காவில் கடந்த ஓராண்டாக ஆண்களின் பிறப்புறுப்பு திருடப்பட்டு காணாமல் போவதாக டிக்டாக் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தகவல் பரவியதை தொடர்ந்து, வன்முறை பரவி சுமார் 80க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
ஆப்பிரிக்காவில் கடந்த ஏப்ரல் 1 அன்று மகாலா என்பவர் அவரது நண்பருடன் கார் விற்பனை தொடர்பாக ஒரு வாடிக்கையாளரை சந்திப்பதற்காக, துண்டுமா என்ற நகரத்திற்கு பயணம் செய்தார்.
அப்போது அவர்கள் ஒரு மதிய உணவிற்காக ஒரு உணவகத்தில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு இருந்த ஒருவரின் பிறப்புறுப்புகளை இவர்கள் திருடிவிட்டதாக, உணவகத்தில் இருந்த நபர்கள் கூச்சலிட தொடங்கினர்.
இதையடுத்து அங்கு திரளான கூட்டம் கூடியதால், அவர்களால் அங்கிருந்து தப்பிச் செல்வது கடினமாக இருந்ததாகவும், பின்னர் அங்கிருந்து தப்பித்து வந்ததாகவும் உயிர்பிழைத்த நபர்கள் தெரிவித்தனர்.
இந்த வகையிலான வதந்திகள் சமூக ஊடகங்கள் மூலமாக பரப்பப்பட்டு, பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த தகவல் ஜாம்பியா, தான்சானியா, மொசாம்பிக், அங்கோலா, மலாவி, புருண்டி, கென்யா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் பரவின.
இதன் காரணமாக கடந்த ஆறு வாரங்களில் சுமார் 55 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் இந்த தாக்குதலில் ஒரு காவல்துறை அதிகாரி, அரசு ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டவர்களும் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இது போன்ற வதந்திகள் கடந்த 2008-ஆம் ஆண்டும் பரவியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் அதிகப்படியான பின்தொடர்பவர்களை வைத்திருப்பவர்கள், மக்களின் கவனத்தையும் அதிகப்படியான பார்வைகளையும் ஈர்ப்பதற்காக இந்த வகையான வதந்திகள் மூலமாக நாட்டில் வன்முறைகளை தூண்டுவதாக கொம்பாசா மாவட்ட ஆணையர் முகமது நூர் கூறியுள்ளார்.
மொசாம்பிக் நாட்டு ஜனாதிபதி டேனியல் சாப்போ, வதந்திகள் பரப்பப்படுவதையும் அதன் விளைவாக ஏற்படும் மரணங்களையும் பகிரங்கமாக கண்டித்தார்.
மேலும் உண்மையில் எந்த நபரும் தங்கள் உடல் உறுப்புகளை இழந்துள்ளதாக எந்த மருத்துவ ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.