எலும்பும் தோலுமாக காட்சியளிக்கும் குத்துச்சண்டை வீரர் ராக்... wwe ரசிகர்கள் அதிர்ச்சி

அமெரிக்காவில் பிரபல பொழுதுபோக்கு குத்துச்சண்டை போட்டியாக WWE உள்ளது.
Rock Johnson
Published on: 
Summary

நடிகரும் குத்துச்சண்டை வீரருமான 54 வயதான ராக் ஜான்சன் எலும்பும் தோலுமாக இருக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் மிகவும் பிரபல பொழுதுபோக்கு குத்துச்சண்டை போட்டியாக WWE உள்ளது.

இந்த குத்துச்சண்டை போட்டியை உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

இந்தியாவில் இந்த குத்துச்சண்டை போட்டிக்கென்று, தனிப்பட்ட முறையில் ரசிகர் பட்டாளம் உள்ளது.

இந்த குத்துச்சண்டை போட்டியில் சுமார் 20 வருடத்திற்கு முன்னால் மிகவும் பிரபலமான வீரராக அமெரிக்காவை சேர்ந்த ராக் ஜான்சன் அறிமுகமாகி, பிரபலமானார்.

இவரது இன்ஸ்டாகிராம் கணக்கை உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 38 கோடிக்கும் அதிகமான நபர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இவர் சமீபத்தில் ‘தி ஸ்மாஷிங் மெஷின்’ என்ற திரைப்படத்தில் எம்.எம்.ஏ. குத்துச்சண்டை வீரர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக, தனது உடல் எடையை சுமார் 13 கிலோ வரை அதிகரித்தார்.

இந்த நிலையில் ராக், தனது அடுத்த திரைப்படமான ‘லிசார்ட் மியூசிக்’ திரைப்படத்தில் சிக்கன் மேன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக, தனது உடல் எடையை சுமார் 23 கிலோ வரை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த உடல் எடை இழப்பு குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட அவர், 23 கிலோ எடையை குறைக்க தனக்கு ஒரு வருடம் ஆனதாக தெரிவித்தார்.

மேலும் இந்த உடல் எடை குறைப்பு விவகாரத்தில், தான் திட்டமிட்டு விவேகமாக செயல்பட விரும்புவதாகவும், தீவிரமான எதையும் செயல்படுத்த விரும்பவில்லை எனவும் கூறினார்.

ஒரு நாளைக்கு அதிகபட்சமாக சுமார் 450 கிராம் மட்டுமே கார்போஹைட்ரேட் உட்கொண்டு வருவதாகவும், குறைந்தபட்சமாக ஒரு நாளைக்கு 250 முதல் 300 கிராம் வரை கார்போஹட்ரேட் எடுத்து வருவதாகவும் கூறினார்.

இதையடுத்து ஒரு நாளைக்கு 75 கிராம் புரோட்டீன் பவுடர், ஒரு கப் புளூபெர்ரி, ஐஸ், ஸ்டீவியா மற்றும் சமைத்த மல்லிகை அரிசி (cooked jasmine rice) ஆகியவற்றை ஒன்றாக கலந்து, பயிற்சி முடிந்த சுமார் 30 முதல் 45 நிமிடங்களில் சாப்பிடுவதாகவும் கூறினார்.

இந்த உடல் எடை குறைப்பில் தான் அற்புதமாக உணர்வதாகவும்; வலிமை, சகிப்புத்தன்மை, பயிற்சியின் போது ஏற்படும் பம்ப்ஸ் அனைத்தும் அருமையாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், தனது இதய ஆரோக்கியம் சிறப்பாக உள்ளதாகவும், தான் தனது உடலை கட்டுக்கோப்பாகவும், உறுதியாகவும் வைத்திருப்பதாகவும் ராக் கூறினார்.

X