வங்கதேசத்தில் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் உட்பட நான்கு பேர் உடல்கள் சடலமாக மீட்பு

வங்கதேசத்தில் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர், மனைவி மற்றும் இரு குழந்தைகள் பூட்டப்பட்ட வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர்.
Bangladesh Teacher Family Murder
Published on

வங்கதேசத்தில் பூட்டப்பட்ட வீட்டிற்குள் ஓய்வுபெற்ற இந்து பள்ளி ஆசிரியர், அவரின் மனைவி, மகள் மற்றும் மகன் ஆகியோர் சந்தேகத்திற்கிடமான நிலையில் சடலமாக இருந்தததை அடுத்து, காவல்துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

பள்ளி ஆசிரியர்

வங்கதேசத்தின் ரங்க்பூர் நகரத்தில் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியரான கணபதி சக்ரவர்த்தி அவரது மனைவி பிரிதிலதா சக்ரவர்த்தி, மகள் அகமி சக்ரவர்த்தி பிரார்த்தி மற்றும் மகன் பிரியம் சக்ரவர்த்தி ஆகியோர் குடும்பமாக வசித்து வந்துள்ளனர்.

கணபதி சக்ரவர்த்தி கடந்த ஆண்டு டிசம்பர் 31 அன்று ரங்க்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவரது மகள் அகமி, அங்குள்ள கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பை முடித்துள்ளார். அவரின் கடைசி மகன், மாவட்ட பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இதையடுத்து சம்பவத்தன்று கணபதிக்கு, அவரின் குடும்ப உறுப்பினர்கள் போன் செய்துள்ளனர். ஆனால் கைபேசி எடுக்கப்படாமல், இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அவரின் குடும்ப உறுப்பினர்கள் கணபதியின் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் முன்வாசல் பூட்டி இருந்தது. இதனால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டது.

பின்னர் அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் உள்ளே நான்கே நபர்களும் இறந்த நிலையில் கிடந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பிரதிலதாவின் சகோதரி பூஜா கூறுகையில், “அவர்களுடைய தொலைபேசிகள் அணைக்கப்பட்டிருந்ததால், சனிக்கிழமை இரவு நாங்கள் தாஸ்பாராவுக்கு வந்தோம்.

வீட்டின் பிரதான வாசல் பூட்டப்பட்டிருந்தது, உள்ளே இருந்த அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டிருந்தன. பின்னர் அங்கு வந்த காவல்துறையினர், பூட்டை உடைத்து வீட்டிற்குள் நுழைந்து, சடலங்களை மீட்டனர்.

நான்கு பேரையும் கொன்றது யார் என்றோ அல்லது அதற்கான நோக்கம் என்ன என்றோ எங்கள் குடும்பத்தினரால் புரிந்துகொள்ள முடியவில்லை.

என் சகோதரியையும் அவளுடைய முழு குடும்பத்தையும் யார் கொன்றார்கள் என்றோ, அது ஏன் நடந்தது, எப்போது நடந்தது என்றோ என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

என் சகோதரியின் கணவர் மிகவும் நல்ல மனிதர். அவருக்கு எதிரிகள் யாருமில்லை. அவர்கள் தாஸ்பாராவில் ஒரு புதிய வீட்டைக் கட்டி அங்கே வசித்து வந்தார்கள்” என்று அவர் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து கணபதியின் சகோதரி மகளான சோமா சக்ரவர்த்தி கூறும்போது, “சனிக்கிழமை இரவு செய்தி கிடைத்ததும், நான் இங்கு வந்து அவரது உடலைப் பார்த்தேன். என் அத்தை, சகோதரி மற்றும் சகோதரரின் உடல்களும் அங்கே கிடந்தன.

என் மாமாவுக்கு எதிரிகளே இல்லை. பள்ளியில் இருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து, அவர் ஒரு ஹோமியோபதி மருத்துவராகப் பணியாற்றத் தொடங்கினார்," என்று அவர் கூறினார்.

இந்த நிலையில் காவல்துறையின் புலனாய்வுத் துறை விசாரனையை தொடங்கி உள்ளதாக காவல் ஆய்வாளர் நஸ்முல் காதர் தெரிவித்தார். இந்த கொலைகளுக்கு யார் பொறுப்பு என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக அவர் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com