

தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் 8-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண சட்டமன்றத்தில் நவம்பர் 8-ந்தேதியை தீபாவளி தினமாக அங்கீகரிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
உறுப்பினர்கள் தர்ஷனா படேல், ஆஷ் கல்ரா ஆகியோர் கொண்டு வந்த இந்த தீர்மானத்தில், "தீபாவளிப் பண்டிகை, உலகின் மிகப் பழமையான பண்டிகைகளில் ஒன்றாகும்.
இது குடும்பங்கள், நண்பர்கள், சமூகத்தினரை ஒன்றிணைத்து தாராள மனப்பான்மை, ஒற்றுமை, மகிழ்ச்சி மற்றும் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் அதே வேளையில், சுய சிந்தனைக்கும் வழிவகுக்கும் ஒரு நிகழ்வாகத் திகழ்கிறது.
2026-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி நடைபெறவுள்ள தீபாவளிப் பண்டிகையை சட்டமன்றம் அங்கீகரிக்கிறது.
மகிழ்ச்சி நிறைந்த இக்கொண்டாட்டத்தில் கலிபோர்னியா மக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.