அழகிலும் அழகு.. 27 ஆண்டுகளுக்கு பிறகு ஐரோப்பாவில் முழு சூரிய கிரகணம் - கண்டு ரசித்த மக்கள்

ஸ்பெயினில் சூரிய அஸ்தமன நேரத்தில் இந்த கிரகணம் நிகழ்ந்ததால், மற்ற இடங்களை விட மிக பார்க்க அழகாக இருந்தது.
சூரிய கிரகணம்
சூரிய கிரகணம்
Published on: 

27 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பிய கண்டத்தில் நேற்று முதல் முழு சூரிய கிரகணம் காணப்பட்டது.

இதற்கு முன்னர் 1999ஆம் ஆண்டில்தான் ஐரோப்பிய நிலப்பகுதியில் முழு சூரிய கிரகணம் தென்பட்டடிருக்கிறது.

27 ஆண்டுகளுக்குப் பிறகு

ஆகஸ்ட் 12 - நேற்று மாலை வட ஸ்பெயின், ஐஸ்லாந்து, கிரீன்லாந்து, போர்ச்சுகலில் முழு சூரிய கிரகணம் தென்பட்டது. ரஷியாவின் வட பகுதியிலும் முழு கிரகணம் தெரிந்தது.

ஐரோப்பாவின் பிற பகுதிகள், வடமேற்கு ஆப்பிரிக்கா மற்றும் வட அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதிகளில் பகுதியளவு சூரிய கிரகணம் தென்பட்டது.

இந்த கிரகணத்தின் உச்சக்கட்டத்தின் போது, நிலவு சூரியனை முழுமையாக மறைத்த நிகழ்வு 2 நிமிடங்கள் 18 வினாடிகள் வரை நீடித்தது.

ரசித்த மக்கள்

அந்தச் சில நிமிடங்களில் பகல் நேரம் திடீரென மாலை நேர இருளாக மாறியது.

உலகின் கோடிக்கணக்கான மக்கள் இந்த முழு சூரிய கிரகணத்தை நேரிலும் நேரலையிலும் கண்டு ரசித்தனர். நாசா இந்த நேரலையை ஒளிபரப்பியது.

ஸ்பெயினில் சூரிய அஸ்தமன நேரத்தில் இந்த கிரகணம் நிகழ்ந்ததால், மற்ற இடங்களை விட மிக பார்க்க அழகாக இருந்தது.

ஸ்பெயினில் மட்டும் சுமார் 60 லட்சம் மக்கள் இதைக் காண திரண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கிரகணம் நிகழ்ந்த நேரத்தில் இரவாக இருந்ததாலும், இந்தியா இந்த கிரகணத்தின் நிழல் பாதையில் அமைந்திருக்கவில்லை என்பதாலும் இங்கிருந்து இந்த சூரிய கிரகணத்தை நம்மால் காண முடியவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com