‘இஸ்ரேலைவிட தனது சொந்த நலனுக்கே முன்னுரிமை... டிரம்பை நினைவூட்டினார்’ - நெதன்யாகு மீது ஜோ பைடன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

தன்னால் நிறைவேற்ற முடியாத அல்லது நிறைவேற்ற எண்ணமில்லாத வாக்குறுதிகளை அளிப்பதில் அவருக்கு எந்தத் தயக்கமும் இருந்ததில்லை.
‘இஸ்ரேலைவிட தனது சொந்த நலனுக்கே முன்னுரிமை... டிரம்பை நினைவூட்டினார்’ - நெதன்யாகு மீது ஜோ பைடன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!
Published on: 

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனின் புதிய சுயசரிதையான ‘பிராமிஸ் மீ, அமெரிக்கா’ புத்தகம் நாளை மறுநாள் (நவ.17) வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்புதகத்தின் சில பகுதிகள் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள்

காசா போரின் போது பொதுமக்கள் உயிரிழப்பைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதாக நெதன்யாகு தன்னிடம் பலமுறை உறுதியளித்ததாகவும், ஆனால் தன்னால் நிறைவேற்ற முடியாத அல்லது நிறைவேற்ற எண்ணமில்லாத வாக்குறுதிகளை அளிப்பதில் அவருக்கு எந்தத் தயக்கமும் இருந்ததில்லை என்றும் பைடன் குறிப்பிட்டுள்ளார்.

“அதிகரித்து வரும் பாலஸ்தீனிய உயிரிழப்புகள், இஸ்ரேலின் நற்பெயருக்கும், போருக்கான அமெரிக்காவின் ஆதரவிற்கும் ஏற்படுத்தி வரும் பாதிப்பை நெதன்யாகு ஒப்புக்கொண்டபோதிலும், இஸ்ரேலின் போக்கை மாற்ற அவர் மீண்டும் மீண்டும் தவறிவிட்டார்.

நாங்கள் இது குறித்து அவர்களிடம் கேட்டபோதெல்லாம், இஸ்ரேலியர்கள் ஒரு விளக்கத்தையோ அல்லது சாக்குப்போக்கையோ கூறினார்கள், ஆனால் விளைவு ஒன்றாகவே இருந்தது” எனக் கூறியுள்ளார்.

சொந்த நலனே முக்கியம்

தன்னால் நிறைவேற்ற இயலாத அல்லது நிறைவேற்ற எண்ணம் இல்லாத வாக்குறுதிகளை அளிப்பதில் நெதன்யாகுவிற்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை.

ஒரு ராஜதந்திரியைப் போல, தனது குறுகிய கால அரசியல் தேவைகளுக்காக மட்டும் சிந்தித்து, இஸ்ரேலின் நீண்ட கால நலன்களைப் பாதுகாக்கத் தவறியது எனக்கு விரக்தியை அளித்தது.

டிரம்பை நினைவூட்டினார்

அவர்மீது (நெதன்யாகு) அதிக நம்பிக்கை இருக்கவில்லை. மேலும், அவரின் போக்குகள் குறித்து நான் கவலை கொண்டிருந்தேன், அவை எனக்கு டிரம்பின் போக்கை நினைவூட்டின. அவர் உண்மையை இலகுவாகக் கருதுவார், மேலும் தனது தனிப்பட்ட தேவைகளுக்காக ஜனநாயக நிறுவனங்களை வளைக்கத் தயங்க மாட்டார்.

என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க உதவி

2023 அக்டோபர் 7 இஸ்ரேலின்மீதான ஹமாஸின் தாக்குதலுக்குப் பிறகு ஜெருசலமிற்கு அமெரிக்கா தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது.

ஹமாஸின் அந்த ஒற்றைத் தாக்குதலைத் தொடர்ந்து பாலஸ்தீனத்தின் நிலப்பரப்பைத் தொடர்ந்து சூறையாடி வருகிறது இஸ்ரேல்.

ஐக்கிய நாடுகள் சபையால் இனப்படுகொலை என முத்திரை குத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 75,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் உணவு மற்றும் மனிதாபிமான உதவிகள்மீதான இஸ்ரேலின் தடையும், அந்நாட்டின் நிலையை இன்னும் மோசமாக்கியுள்ளது.

X