இங்கிலாந்து அரச தம்பதி வில்லியம்ஸ்-கேத் மிடில்டன் இந்தியா வருகை

இளவரசர் வில்லியமால் 2020-ம் ஆண்டு எர்த்ஷாட் பரிசு திட்டத்தை தொடங்கினார்.
Williams- Kate
Published on: 

இங்கிலாந்து இளவரசர் வில்லியம், அவரது மனைவியான இளவரசி கேட் மிடில்டன் ஆகியோர் 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வர உள்ளனர்.

அவர்கள் மும்பையில் வருகிற 17-ந்தேதி நடைபெறும் சுற்றுச்சூழல் விருது (எர்த்ஷாட் பரிசு) வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்கள்.

இந்த விருது வழங்கும் விழாவில் கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர், நடிகை ஆலியா பட் உள்பட பல பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.

இளவரசர் வில்லியமால் 2020-ம் ஆண்டு எர்த்ஷாட் பரிசு திட்டத்தை தொடங்கினார். இது காலநிலை மாற்றம் மற்றும் பிற சுற்றுச்சூழல் சவால்களுக்கான தீர்வுகளைக் கண்டறிந்து அவற்றை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.

X