இங்கிலாந்து அரச குடும்பத்தில் மீண்டும் இணைய ஹாரி முயற்சி

அரச குடும்பத்தினருக்கும், ஹாரி-மேகன் தம்பதிக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது. 2022-ல் இளவரசர் ஹாரி அரச குடும்பத்தை விட்டு அதிகாரப்பூர்வமாக வெளியேறினார்.
இங்கிலாந்து அரச குடும்பத்தில் மீண்டும் இணைய ஹாரி முயற்சி
Published on

லண்டன்:

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் ஹாரி கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்க நடிகை மேகன் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இதனால் அரச குடும்பத்தினருக்கும், ஹாரி-மேகன் தம்பதிக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது.

இதனையடுத்து 2022-ல் இளவரசர் ஹாரி அரச குடும்பத்தை விட்டு அதிகாரப்பூர்வமாக வெளியேறினார். பின்னர் அவர்கள் இருவரும் அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தனர்.

இந்தநிலையில் தற்போது அரச குடும்பத்துடனான உறவை மீட்டெடுக்க ஹாரி முயற்சித்து வருகிறார். இதற்காக அவர் தனது முன்னாள் ஆலோசகர்களின் உதவியை நாடி உள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் அரச குடும்பத்தில் முழுமையாக திரும்புவதை அவர் நோக்கமாக கொண்டிருக்கவில்லை என அங்குள்ள ஊடகங்கள் கூறுகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com