போலந்தில் 2,800 ஐரோப்பிய வீரர்கள் பிரமாண்ட போர்ப் பயிற்சி

நோவா டெபா தளத்தில் 2 வார கால தீவிர ராணுவப் பயிற்சி நடைபெற்று வருகிறது.
Europe
Published on: 

ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் தீவிரப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

போர் நிறுத்தத்துக்குப் பிறகு உக்ரைனில் அமைதியை நிலைநாட்டவும், அந்நாட்டு ராணுவத்தை மறுகட்டமைக்கவும் ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டுள்ளன.

இதற்காக பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து தலைமையிலான விருப்பமுள்ள நாடுகளின் கூட்டணி சார்பில், தென்கிழக்கு போலந்தில் உள்ள நோவா டெபா தளத்தில் 2 வார கால தீவிர ராணுவப் பயிற்சி நடைபெற்று வருகிறது.

இதில் பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 800 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

டிரோன் தாக்குதல்களை முறியடிப்பது, கருங்கடலில் கண்ணி வெடிகளை அகற்றுவது மற்றும் போர் விமானங்களை இயக்குவது குறித்து இவர்கள் ஒத்திகை பார்த்து வருகின்றனர்.

இருப்பினும், உக்ரைனுக்குள் வெளிநாட்டுப் படைகள் நுழைந்தால் அவை தாக்கப்படும் என ரஷியா ஏற்கனவே எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X