அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி

விமான நிலையம் சென்ற பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பிரதமர் மோடியை வழியனுப்பினார்.பிரான்ஸ் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைந்தார்.
அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி
Published on

பாரிஸ்:

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக பிரான்ஸ், அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 10-ம் தேதி பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி தலைநகர் பாரிசில் நடைபெற்ற சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில் பங்கேற்றார்.

இதையடுத்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானையும் பிரதமர் மோடி சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

இதற்கிடையே, பிரான்ஸ் பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டார். பிரான்சின் மெர்சிலி நகரில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். விமான நிலையம் சென்ற பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்தார்.

இந்நிலையில், பிரான்சில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைந்தார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.

வாஷிங்டனில் பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை சந்திக்கிறார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றபின் முதல் முறையாக அவரை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com