

அரசு முறை பயணமாக இரு ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி முதலில் பிரான்ஸ் நாட்டிற்க சென்றிருந்த பிரதமர் மோடி அந்நாட்டின் நைஸ் நகரில் வைத்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தார்.
இதைத் தொடர்ந்து பிரதமர மோடி ஸ்லோவாக்கியா சென்றடைந்தார். இரண்டு நாள் பயணமாக ஸ்லோவாக்கியா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஸ்லோவாக்கியாவில் உள்ள இந்திய பூர்விகத்தினரை பிரதமர் மோடி சந்தித்தார். ஸ்லோவாக்கியாவில் பிரதமர் மோடி அந்நாட்டு ஜனாதிபதி பெல்கிரினியையும், பிரதமர் பிகோவையும் சந்திக்கிறார்.
இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், சர்வதேச அரசியல் சூழ்நிலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். ஸ்லோவாக்கிய பயணத்தை நிறைவு செய்யும் பிரதமர் மோடி நாளை மீண்டும் பிரான்ஸ் செல்கிறார்.
பிரான்சில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். பின்னர், ஜி7 நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்திக்கிறார். இதையடுத்து, 18ம் தேதி பாரிசில் நடைபெறும் தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதனை தொடர்ந்து அன்றைய தினமே பிரதமர் மோடி இந்தியா திரும்புகிறார்.