மத்திய கிழக்கு விவகாரங்கள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை... யு.ஏ.இ. அதிபர் ஷேக் முகமது பின் - பிரதமர் மோடி சந்திப்பு!

ஜி7 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக இரு தலைவர்களும் சந்தித்தனர்.
மத்திய கிழக்கு விவகாரங்கள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை... யு.ஏ.இ. அதிபர் ஷேக் முகமது பின் - பிரதமர் மோடி சந்திப்பு!
Published on

பிரதமர் நரேந்திர மோடியும், ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானும் மேற்கு ஆசிய நிலைமை குறித்து விவாதித்ததோடு, பிராந்தியத்தில் "நீடித்த அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை" உறுதி செய்வதற்கு பேச்சுவாரத்தை, ராஜதந்திரம் மற்றும் சர்வதேச சட்டத்தை மதிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

கிழக்கு பிரான்சின் எவியான்-லெ-பேன்ஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக இரு தலைவர்களும் சந்தித்தனர். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டள்ளார்.

அந்த பதிவில், "எனது சகோதரர், மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களுடன் மிகவும் சிறப்பான சந்திப்பு நடைபெற்றது. பல்வேறு துறைகளில் இந்தியா-ஐக்கிய அரபு அமீரக உறவுகள் குறித்தும், நமது விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்," என்று கூறினார்.

வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

அதில், "இருதரப்பு விரிவான மூலோபாய கூட்டாண்மையை ஆழப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இருவரும் ஆய்வு செய்தனர், மேலும் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்" என்று கூறினார்.

இரு தரப்பினரும் "ஹார்முஸ் நீரிணை வழியாக தொடர்ச்சியாக சுதந்திரமான, பாதுகாப்பான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்து, வர்த்தகம் மற்றும் வணிகம்" நடைபெற வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com