பாகிஸ்தானில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்ற பெண்

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜீனத் வஹீத்துக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பிரசவத்துக்கு பின்னர் தாயும், குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்ற பெண்
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டியைச் சேர்ந்தவர் முகமது வஹீத்தின் மனைவி ஜீனத் வஹீத் (வயது 27). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு ராவல்பிண்டியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு ஒரே நேரத்தில் 2 பெண் குழந்தைகள் உள்பட அழகான 6 குழந்தைகள் பிறந்தனர்.

பிரசவத்துக்கு பின்னர் தாயும், குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். எனினும் பாதுகாப்பு கருதி தற்போது அந்த குழந்தைகள் இன்குபேட்டரில் வைக்கப்பட்டு உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com