தொழில்நுட்ப கோளாறால் 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து - பயணிகள் கடும் அவதி

லுஃப்தான்சா உள்ளிட்ட விமான நிறுவனங்களும் இடையூறுகளை பதிவு செய்துள்ளன.
Flights Grounded
Published on

பிரிட்டன் வான்வழி போக்குவரத்துட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, நாடு முழுவதும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக, விமான பயணங்களை கண்காணிக்கும் வலைத்தளமான Flightradar24 தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் தேசிய வான்வழி போக்குவரத்து சேவை (NATS), இந்தப் பிரச்சினை அதன் விமான செயலாக்க அமைப்புடன் தொடர்புடையது என்று கூறியது. ஐக்கிய இராச்சியம் முழுவதும் உள்ள விமான நிலையங்களை பாதித்த இந்த பிரச்சினையை தொடர்ந்து, இயல்பு நிலையை மீட்டெடுக்க பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பிரச்சனையை சரிசெய்யும் பணிகள் முழுமை பெறுவதாகவும், தங்கள் விமான அமைப்பு மீண்டு வரத் தொடங்கியுள்ளதாக NATS பின்னர் தெரிவித்தது.

625 விமானங்கள் ரத்து:

இங்கிலாந்து விமான நிலையங்களுக்கு வரும் அல்லது அங்கிருந்து புறப்படும் குறைந்தது 625 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக Flightradar24 தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட விமான நிலையங்களில் லண்டன் ஹீத்ரோவும் ஒன்றாகும், அதே நேரத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஈஸிஜெட், கே.எல்.எம். மற்றும் லுஃப்தான்சா உள்ளிட்ட விமான நிறுவனங்களும் இடையூறுகளை பதிவு செய்துள்ளன.

தங்கள் விமானங்கள் ரத்து செய்யப்படுவதற்கு முன்பு, பல மணிநேரம் விமானத்திலேயே சிக்கி தவித்ததாக பல பயணிகள் சமூக வலைதளங்களில் தெரிவித்தனர். மற்றவர்கள், இந்த இடையூறின்போது விமான நிறுவனங்களிடம் இருந்து தகவல் தொடர்பு சரியாக இல்லை என்று புகார் கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com