

பராகுவே நாட்டின் அதிபர் சாந்தியாகோ பென்யா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
தென் அமெரிகாவில் உள்ள பராகுவே நாட்டின் அதிபர் சாந்தியாகோ பென்யா பதவிநீக்கம் செய்யப்பட்டார்.
நேற்று முன் தினம் அவர் ராஜினாமா செய்வதாக அறிவித்த நிலையில் நாடாளுமன்றத்தில் அவரை பதவிநீக்கம் செய்ய கீழ்சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதனால் கடந்த நவம்பர் 3ஆம் தேதி அந்நாட்டு மத்திய வங்கி அதன் நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. தீர்மானத்தை கீழ்சபை 78 ஆதரவு வாக்குகளுடன் ஒருமனதாக நிறைவேற்றியது.
அந்த தீர்மானம் நேற்று மேல்சபையான செனட் சபையிலும் 44 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட நிலையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பராகுவேயின் முன்னணி டிஜிட்டல் வங்கியான யுனோ வங்கி கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளாகியது.
இந்த வங்கியில் சுமார் 30 இலட்சம் வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ளனர்.
வங்கி சேவைகள் முடக்கப்பட்டதால் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் சேமிப்புகள், ஓய்வூதியங்கள் மற்றும் சம்பளங்கள் முடங்கியுள்ளன. பில்லியன் கணக்கான டாலர் அரசு நிதிகளும் கேள்விக்குறியாகியுள்ளன.
இதனிடையே யுனொ வங்கி வங்கியின் முன்னாள் உரிமையாளர் குழுமத்துக்கும் அதிபர் சந்தியாகோ பென்யாவுக்கும் இடையிலான முந்தைய வர்த்தகத் தொடர்புகள் கவனம் பெற்றது. எனவே வங்கி நெருக்கடி அதிபர் மீதான ஆத்திரமாக மாறியுள்ளது.
நேற்று பதவிநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து சாண்டியாகோ பென்யா அவரது வீட்டில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். விசாரணை முடியும் வரை பெனா தனது வீட்டை விட்டு வெளியேற முடியாது.
பென்யா பொருளாதாரக் குற்றங்கள் மற்றும் ஊழல் தடுப்புப் புலனாய்வு முகமையின் முன் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
பென்யா தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, சட்ட வரம்பை மீறி அரசாங்க ஓய்வூதிய நிதியிலிருந்து 355 மில்லியன் டாலர் உட்பட, மில்லியன் கணக்கான டாலர் அரசாங்க நிதியை யூனோ வங்கியில் டெபாசிட் செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பென்யாவின் சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களே அவருக்கு எதிராகத் திரும்பினர். நான்கு மூத்த அரசாங்க அதிகாரிகள் ராஜினாமா செய்துள்ளனர். இது பராகுவே அரசியலில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
பென்யா நீக்கப்பட்டதை தொடர்ந்து, துணை அதிபர் பெட்ரோ அலீனா நேற்று அதிபர் பதவியேற்றார். அவர் ஆகஸ்ட் 2028 வரை தனது பதவிக்காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு பணியாற்றுவார்.
52 வயதான அலியானா, நீண்ட காலமாக ஆட்சியில் இருக்கும் பழமைவாத கொலராடோ கட்சியின் தலைவர் ஆவார். இதற்கு முன்பு அவர் நாட்டின் தெற்கு மாகாணமான நிம்புகுவின் ஆளுநராகவும், கீழ்சபையின் சபாநாயகராகவும் பணியாற்றியுள்ளார்.
வங்கியில் சிக்கியுள்ள மக்களின் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதும், இந்த முழு விவகாரத்திற்கும் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுமே இப்போது அவருக்கு முன்னால் உள்ள மிகப்பெரிய சவாலாகும்.