சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு

இரு நாட்டு எல்​லைப் பிரச்​சனை​கள் தொடர்​பாக கூட்​டத்​தில் விவா​திக்​கப்​பட்​டது.
china
Published on

சீனா சென்றுள்ள இந்திய தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் அந்நாட்டு துணை அதிபரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த ஆண்டு பிரிக்ஸ் கூட்​டமைப்​புக்கு இந்​தியா தலை​மையேற்றுள்​ளது. அடுத்த மாதம் (செப்​டம்​பர்) 12, 13-ம் தேதி​களில் டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடை​பெற உள்​ளது.

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட பிரிக்ஸ் கூட்​டமைப்​பின் அனைத்து நாடு​களின் தலை​வர்​களும் இந்த உச்சி மாநாட்​டில் பங்கேற்​பதை உறுதி செய்​துள்​ளனர்.

அஜித் தோவல் - வாங் யீ சந்திப்பு

இதற்கிடையே, எல்லை விவ​காரம் தொடர்​பாக இந்​தி​யா- சீனா இடையி​லான 25-வது சுற்று பேச்​சு​வார்த்தை சீன தலைநகர் பீஜிங்​கில் நடை​பெற்​றது.

இதில் இந்​திய தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல், சீன வெளி​யுறவு மந்திரி வாங் யீ ஆகியோர் பங்​கேற்​றனர். அருணாச்சல பிரதேசம், லடாக் உள்பட இரு நாட்டு எல்​லைப் பிரச்​சனை​கள் தொடர்​பாக கூட்​டத்​தில் விவா​திக்​கப்​பட்​டது.

இதுதொடர்​பாக பீ​ஜிங்​கில் உள்ள இந்​திய தூதரகம் வெளி​யிட்ட அறிக்​கை​யில், சீன வெளி​யுறவு மந்திரியை தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் சந்​தித்​துப் பேசி​னார். இச்சந்​திப்​பின்​போது எல்லை​யில் அமை​தியை நிலை​நாட்ட வேண்​டும். இருதரப்பு பொருளா​தார, அரசி​யல் உறவை வலுப்​படுத்த வேண்​டும் என முடிவு எடுக்கப்பட்டது என தெரிவிக்​கப்​பட்டுள்​ளது.

இந்நிலையில், சீன துணை அதிபர் ஹான் ஜெங்​கை​ இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பீஜிங்கில் சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது பிரிக்ஸ் உச்சி மாநாட்​டில் சீன அதிபர் ஜி ஜின்​பிங் பங்​கேற்​பது குறித்து இரு தலை​வர்​களும் முக்​கிய ஆலோ​சனை நடத்​தினர். இதையடுத்து, டெல்லி பிரிக்ஸ் உச்சி மாநாட்​டில் சீன அதிபர் ஜி ஜின்​பிங் பங்​கேற்​பார் என தகவல்​ வெளி​யாகியது.

இந்தியா வரும் சீன அதிபர்

சீன அதிபர் ஜி ஜின்​பிங் கடந்த 2019-ம் ஆண்டு அக்​டோபரில் இந்​தி​யா​வில் சுற்றுப்பயணம் மேற்​கொண்​டார். பிரதமர் மோடி​யும், சீன அதிபர் ஜி ஜின்​பிங்​கும் தமிழகத்​தின் மாமல்​லபுரத்​தில் சந்​தித்​துப் பேச்​சு​வார்த்தை நடத்​தினர்.

அதன்பின், 7 ஆண்​டுக்​குப் பிறகு சீன அதிபர் மீண்​டும் இந்​தியா வரு​கிறார். இந்த வருகை முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாக இருக்​கும்​ என இந்​தி​ய வெளி​யுறவுத்​துறை தெரிவித்​துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com