Time இல்ல.. டிரம்ப் பல வழிகளில் தொடர்புகொள்ள முயன்றும் கண்டுகொள்ளாத கிம் ஜாங் உன்

அமெரிக்கா உடனான உறவை கிம் ஜோங் உன் விரும்பவில்லை.
டிரம்ப், கிம் ஜாங் உன்
டிரம்ப், கிம் ஜாங் உன்
Published on: 
Summary

கிம் ஜாங் உன்னுடன் பேசுவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகவும் ஆனால் அவர் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் முதல்முறை பதவி வகித்த போது, 2019 ஆம் ஆண்டு வட கொரியா சென்றார்.அங்கு அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன்னை சந்தித்து பேச்சவார்த்தை நடத்தினார்.

ஆனால் அணுஆயுத திட்டத்தை கைவிட மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதன் பிறகு அமெரிக்கா உடனான உறவை கிம் ஜோங் உன் விரும்பவில்லை.

இந்நிலையில் 2வது முறையாக அதிபராக பதவியேற்ற டிரம்ப் வட கொரியாவுடன் மீண்டும் உறவை ஏற்படுத்த முயன்று வருகிறார்.

தகவலின்படி, கிம் ஜாங் உன்னுடன் பேசுவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகவும் ஆனால் எந்த பதிலும் இல்லை.

அதிகாரப்பூர்வ தொலைபேசி எண் உள்ளிட்ட பல்வேறு வழிகள் மூலம் தொடர்பு கொள்ள முயன்றும் பதில் இல்லையாம்.

கண்டுகொள்ளாத கிம்

கிம் ஜாங் உன் கண்டுகொள்ளாததால், அவருக்கு கடிதம் எழுத டிரம்ப் முடிவு செய்தார். அந்த கடிதத்தை நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை சபையின் வடகொரிய அலுவலகம் மூலம் ஒப்படைக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் திட்டமிட்டனர்.

அதன்படி அமெரிக்க அதிகாரிகள் சிலர் வடகொரியா அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த வடகொரிய தூதர் ஒருவரிடம் டிரம்ப் எழுதிய கடிதத்தை வழங்கி உள்ளனர்.

ஆனால், அந்த கடிதத்தை வடகொரிய தூதர் திறந்து கூட பார்க்கவில்லை என்றும் பின்னர் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தின் போது அமெரிக்க பிரதிநிதி முன்னிலையில் அந்த கடிதத்தை வைத்து விட்டு சென்றுள்ளார்.

X