நைஜீரியாவில் படகு கவிழ்ந்து 24 பேர் பலி!

படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டும் ஓட்டுநர் கரைக்கு செல்ல மறுத்து தொடர்ந்து இயக்கியதால் விபத்து நிகழ்ந்தது
Nigeria Boat Accident
Published on: 
Summary

நைஜீரியாவின் பயல்சா மாகாணத்தில் உள்ள ஆற்றில் பயணிகள் படகு ஒன்று திடீரெனக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மாயமானவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

படகு கவிழ்ந்தது

நைஜீரியாவின் பயல்சா மாகாணத்தில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக ஏராளமான பயணிகளுடன் படகு ஒன்று ஆற்றில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்தப் படகு நிலைதடுமாறி ஆற்றில் கவிழ்ந்தது. படகு கவிழ்ந்ததும் அதில் இருந்த பயணிகள் அனைவரும் ஆற்றில் விழுந்து தத்தளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்தக் கோர விபத்தில் 24 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 20-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆற்றில் மூழ்கி மாயமான பலரைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

படகு விபத்து

இதற்கிடையே, விபத்து குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் படகில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதே விபத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இயந்திரக் கோளாறை உணர்ந்த பயணிகள், படகைப் பாதுகாப்பாகக் கரையை நோக்கிச் செலுத்துமாறு ஓட்டுநரிடம் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், ஓட்டுநர் அதற்கு மறுத்து தொடர்ந்து படகை இயக்கியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

விபத்து ஏற்பட்டவுடன் படகு ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகியுள்ளார். அவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், இந்த விபத்து தொடர்பாகப் படகு மேலாளரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X