நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் துப்பாக்கிச் சூடு!

என்.பி.ஏ சாம்பியனான நியூயார்க் நிக்ஸ் அணியின் வெற்றியைக் கொண்டாடும் அணிவகுப்பு நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு.
Newyork
Published on

நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் நேற்று பிற்பகல் சுமார் 3:40 மணியளவில் பல துப்பாக்கிச் சூடுகள் நடந்தது. இந்நிலையில் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளும் வழிப்போக்கர்களும் தஞ்சம் தேடி ஓடினர்.

முன்னதாக கீழ் மன்ஹாட்டனின் தெருக்களில் என்.பி.ஏ சாம்பியனான நியூயார்க் நிக்ஸ் அணியின் வெற்றியைக் கொண்டாடும் அணிவகுப்பு நிகழ்ச்சியில் மக்கள் கூடியிருந்தனர். இந்த நிகழ்விற்காக சுமார் 10,000 காவல்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில் அங்கு திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. இதனால் மக்கள் கூச்சலிட்டு, பாதுகாப்பிற்காக ஆங்காங்கே ஓடினர். இருப்பினும் ஒருவர் காயமடைந்தார்.

அவரை மீட்டு காவல்துறையினர் மருத்துவமனையில் சேர்த்தனர். முன்னதாக துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டவரை காவல்துறையினர் துரத்திப் பிடித்தனர்.

மேலும் இத்துப்பாக்கிச் சூடு நடத்திய 17 வயது இளைஞரை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து விரிவான தகவல்கள் எதுவும் அதிகாரிகளிடம் இருந்து தெரிவிக்கப்படவில்லை.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com