இஸ்ரேல் பிரதமருக்கு அறுவை சிகிச்சை- நாளை வீடு திரும்புகிறார்

ஜெருசலேமில் உள்ள ஹடாசா மருத்துவ மையத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.=பிரதமரின் உடல்நிலை சீராக உள்ளது.
இஸ்ரேல் பிரதமருக்கு அறுவை சிகிச்சை- நாளை வீடு திரும்புகிறார்
Published on: 

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு மேற்கொள்ளப்பட்ட குடலிறக்க அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து நாளை பிற்பகல் வீடு திரும்புவார் என மருத்துவர்களின் ஆலோசனையை மேற்கோள் காட்டி பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமரின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் மருத்துவமனையில் இருந்து தனது அன்றாட பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜெருசலேமில் உள்ள ஹடாசா மருத்துவ மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்," இன்று பிரதமர் நெதன்யாகுவிற்கு வெற்றிகரமாக குடலிறக்க அறுவை சிகிச்சைக்கு மேற்கொள்ளப்பட்டாகவும், பின்னர், நெதன்யாகு சுயநினைவுடன் இருப்பதாகவும், குடும்பத்துடன் உரையாடி வருவதாகவும், அவர் குணமடைந்து வருகிறார்" என குறிப்பிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com