நேபாள பெருவெள்ளம் - ரூ.24,187 கோடி இழப்பு!

இந்திய மதிப்பில் ரூ.24,187 கோடி மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்துள்ளன.
நேபாள பெருவெள்ளம் - ரூ.24,187 கோடி இழப்பு!
Published on

கடந்த வாரம் நேபாளத்தில் ஏற்பட்ட பேரிடர் வெள்ளத்தில், குறைந்தது 387.5 பில்லியன் நேபாள ரூபாய் (2.56 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்புள்ள சொத்துக்கள், வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதாவது இந்திய மதிப்பில் ரூ.24,187.59 கோடி மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்துள்ளன.

4 மாதங்களுக்கு மட்டும் ரூ.500 கோடி

இந்த சேதமதிப்புகளைத் தவிர சாலைகள், தற்காலிக முகாம்கள் அமைத்தல், குடிநீர் வழங்குதல், மின்சாரம் வழங்குதல் உள்ளிட்ட மீட்பு மற்றும் அத்தியாவசிய கட்டுமானப் பணிகளுக்கு அடுத்த நான்கு மாதங்களில் மட்டும் ரூ.497 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறைந்த 7500 வீடுகள் முற்றிலும் அடித்து செல்லப்பட்டதாகவும், தற்போது சுமார் 20 ஆயிரம் வீடுகளை மீண்டும் கட்டவேண்டிய சூழல் இருப்பதாகவும் அந்நாட்டின் தேசிய பேரிடர் இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் தர்ம ராஜ் உப்ரேதி தெரிவித்தார்.

நேபாள பெருவெள்ளம்

ஆகஸ்ட் 26 அன்று, நேபாளம் மற்றும் சீன எல்லைப் பகுதியில் பனிப்பாறைகள் சரிந்து, திரிசூலி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அந்த வெள்ளப்பெருக்கு நேபாளத்தின் பல கிராமங்களையும், நகரங்களையும் அடித்துச் சென்றது.

இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 1250க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com