இந்திய மாம்பழங்களுக்கு தடையில்லை - நேபாள அரசு அறிவிப்பு

இந்திய அதிகாரிகளின் தரச்சான்றிதழ் பெறப்பட்டதை அடுத்து, எல்லையில் நிறுத்தப்பட்ட மாம்பழ லாரிகள் தற்போது அனுமதிக்கப்பட்டு உள்ளன.
Mangoes
Published on

இந்திய மாம்பழங்களுக்கு தடையில்லை - நேபாள அரசு அறிவிப்பு

இந்தியாவில் இருந்து மாம்பழங்களை இறக்குமதி செய்ய எந்த தடையும் விதிக்கப்படவில்லை என நேபாள அரசு அறிவித்துள்ளது.

அதிக பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாடு மற்றும் எல்லைப் பகுதிகளில் தரப்பரிசோதனை வசதிகள் இல்லாத காரணத்தால், இந்திய மாம்பழங்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதனால் எல்லையில் மாம்பழ லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் நேபாள வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"இந்திய மாம்பழங்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. சந்தை தேவை மற்றும் உரிய விதிமுறைகளின்படியே அவை அனுமதிக்கப்படுகின்றன" என தெளிவுபடுத்தியுள்ளது.

இந்திய அதிகாரிகளின் தரச்சான்றிதழ் பெறப்பட்டதை அடுத்து, எல்லையில் நிறுத்தப்பட்ட மாம்பழ லாரிகள் தற்போது அனுமதிக்கப்பட்டு உள்ளன. இந்திய இறக்குமதியைத் தடுத்தால் உள்நாட்டுச் சந்தையில் கடும் தட்டுப்பாடு ஏற்படும் என வியாபாரிகள் எச்சரித்த நிலையில் நேபாள அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com