மீட்புப் படைகள், ராணுவ ஹெலிகாப்டர்களை அனுப்ப முன்வந்த நாடுகள்: நிராகரித்த நேபாளம்- காரணம் என்ன?

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுமார் 600 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேபாளம் வெள்ளப் பெருக்கு
நேபாளம் வெள்ளப் பெருக்கு
Published on
Summary

நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பல நாடுகள் மீட்புப்படைகள் அனுப்ப தயாராக இருந்த நிலையில், நேபாளம் அதை ஏற்க மறுத்துள்ளது.

நேபாளத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீரென வெள்ளப்பெருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்று மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் சுமார் 600 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், ஏராளமானோர் சேறு சகதிகளுடன் கூடிய ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் மண்ணில் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மீட்புப்படைகள் அனுப்பு முன் வந்த நாடுகள்

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இந்த பெரும் சோக சம்பவத்திற்கு இந்தியா, இலங்கை, சீனா போன்ற நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. இந்தியா இரண்டு விமானங்கள் மூலம் மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைத்துள்ளது.

இந்தியா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் மீட்புப்படை வீரர்களையும், ஹெலிகாப்டர்களையும் அனுப்ப முன்வந்துள்ளன. ஆனால் நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, வெளிநாட்டின் உதவிகளை ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

2015-ல் கற்றுக் கொண்ட பாடம்

இதற்கு 2015-ம் ஆண்டு நடைபெற்ற சம்பவம்தான் காரணம் எனக் கூறப்படுகிறது. 2015-ல் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக நேபாளம் வெளிநாட்டு உதவிகளை கோரியது. அப்போது, வெளிநாட்டில் இருந்து மீட்புப்படைகள் வந்தன.

உலகம் முழுவதிலுமிருந்து மீட்புக் குழுக்கள், ராணுவ விமானங்கள் மற்றும் நிவாரண அமைப்புகள் வந்தன. இது நேபாளத்தின் அவசரகாலத் திறனை விரிவுபடுத்திய அதே வேளையில், இந்த திடீர் வருகை கடுமையான போக்குவரத்து மற்றும் நிர்வாக சிக்கல்கள் உருவாக்கியது.

விமான நிலையங்கள், சாலைகள் மற்றும் தகவல் தொடர்புகள் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வெளிநாட்டுக் குழுக்களுக்கு இடையேயான போட்டியும், அவற்றின் நகர்வுகளை ஒருங்கிணைப்பதில் உள்ள சிரமங்களும் நிர்வாகத்தைச் சிக்கலாக்கியதாக நேபாள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தனித்தனியாகச் செயல்படும் பல வெளிநாட்டு மீட்புக் குழுக்களுக்கு இடமளிப்பதற்குப் பதிலாக, ஒரு தெளிவான நேபாள காமாண்ட் தொடரைத் தக்க வைத்துக் கொள்வதன் மூலம், இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் தவிர்க்க இப்போது விரும்புவதாக தெரிகிறது.

தற்போது நேபாளம் மட்டுமே மீட்பு பணியை கையாண்டால் உத்தரவு பிறப்பிக்கும் ஒரு தலைமையின் கீழ் அனைத்து தகவல்களையும் பெற முடிவும் என நேபாளம் நினைக்கிறது. அதேவேளையில் நிவாரணம் அளிப்பதாக இருந்தால் பிரதமர் நிவாணர நிதிக்கு அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளது.

அப்போதுதான் ஒரு இடம் வழியாக முறையாக நிவாரணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடையும் எனவும் நினைக்கிறது. இதற்கிடையே உடல்கள் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்டு வருவதால் மருத்துவமனையில் உடல்கள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.

ரசுவாவில் மருத்துவமனைகள் சேதம்

ரசுவா மாவட்டத்தில் மருத்துவமனை, சுகாதார மையங்கள், சாலைகள் உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உடனடியாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நேபாளம் தன்னிச்சையாக விரைவாக மீட்புப் பணியை மேற்கொள்ள முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அதற்கான திறன் தங்களிடம் இருப்பதாக நேபாளம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

எப்படியோ இடுபாடுகள், தகவல் தொடர்பு இல்லாத இடங்களில் தவித்துக் கொண்டிருப்போரை விரைவாக மீட்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com