நேபாள வெள்ளம்: ஆயிரத்தைக் கடந்த பலி எண்ணிக்கை

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 4 ஆயிரம் பேர் மாயமாகியுள்ளனர்.
nepal flood
Published on
Summary

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.

நேபாளத்தில் வெள்ளம்

சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. நேபாள எல்லையில் இமயமலையில் அமைந்துள்ள இப்பகுதியில் கடந்த 26-ம் தேதி திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

இமயமலையில் பனிப்பாறை உடைந்து திபெத் வழியாக நேபாளத்தில் பாயும் போடேகோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த வெள்ளத்தால் நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

வெள்ளத்தில் உள்நாட்டு மக்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட பலர் அடித்து செல்லப்பட்டுள்ளனர். வீடுகள், வாகனங்கள் என அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. சாலைகள் மற்றும் மின்சாரக் கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

வெள்ளத்தில் சிக்கிய பகுதிகளுக்குச் செல்லும் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதம் அடைந்ததால் பல இடங்களில் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப்பணி மேற்கொள்ளப்பட்டது.

பலி எண்ணிக்கை 1000

இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1003 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 4,000 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். வெள்ள பாதிப்பில் சிக்கிய 11,000 பேர் மீட்கப்பட்டனர்.

மீட்புப் பணிகளில் நேபாளம், இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com