விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட 30 ஜப்பானிய காடை முட்டைகள்: நாசா சோதனை

30 காடை கரு முட்டைகளை நாசா விஞ்ஞானிகள் விண்வெளி நிலையத்திற்கு கொண்டு சென்று 16 நாட்கள் ஆய்வு செய்தனர்.
NASA Quail Egg Experiment
Published on
Summary

அமெரிக்காவில் நாசா விஞ்ஞானிகள் கருவுற்ற 30 ஜப்பானிய காடை முட்டைகளை ஆய்வுக்காக விண்வெளி மையத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து விண்வெளி நிலையத்தில் 16 நாட்கள் அடைக்காக்கப்பட்ட முட்டைகள், மறுபடியும் ஆய்விற்காக பூமிக்கு கொண்டு வரப்பட்டன.

30 ஜப்பானிய காடை முட்டைகள்

அமெரிக்க நாசா விண்வெளி வீரரான ஷானன் லூசிட் என்பவர் கடந்த 1995-ஆம் ஆண்டு, 30 ஜப்பானிய கருவுற்ற முட்டைகளை எடுத்துக் கொண்டு, ‘மிர்’ என்ற விண்வெளி நிலையத்திற்கு ஆய்வுக்காக சென்றார்.

மைக்ரோ விசை ஈர்ப்பு (Micro gravity) இல்லாமல் விண்வெளி நிலையத்தில், உயிரினங்கள் எவ்வாறு உயிர் வாழ்கின்றது என்பதை கண்டறியும் சோதனை முயற்சியாக, இந்த 16 நாட்கள் பயணம் அமைந்தது.

பாதுகாப்பான முறையில் அடைகாப்பு

இதையடுத்து விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்ட காடை முட்டைகள், அங்குள்ள ஓர் அடைகாப்பானில் பாதுகாப்பாக 16 நாட்களுக்கு அடை வைக்கப்பட்டது.

இதுகுறித்து நாசா கூறுகையில், காடை முட்டைகளை பாதுகாப்பாக அடைகாப்பதற்கு பல அடுக்குகள் கொண்ட தடுப்புகள் தேவைப்பட்டதாக தெரிவித்தது.

ஏனெனில் முட்டையில் இருந்து தவறுதலாக கசியும் ஒரு துளி, விண்கலம் முழுவதும் மிதந்து சென்று, விண்கலத்தில் பயணிக்கும் விஞ்ஞானிகளுக்கு கடுமையான காயத்தை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்தது.

இதன் காரணமாக, நாசா விஞ்ஞானிகள் கருவுற்ற முட்டைகளை பாதுகாப்பாக கையாளுவதற்காக, அதற்கென வடிவமைக்கப்பட்ட கையுறைகளை வடிவமைத்து பயன்படுத்தினர்.

பூமிக்கு கொண்டுவரப்பட்ட முட்டைகள்

இதையடுத்து 16 நாட்கள் விண்வெளி சோதனைக்கு பிறகு, பூமிக்கு கொண்டுவரப்பட்ட கரு முட்டைகள், எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சியை பெற்றிருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இருப்பினும் விண்வெளியில் வளர்ந்த கருக்களின் உடல் எடையில் லேசான அளவில் வளர்ச்சியில் தாமதங்கள் இருந்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

மேலும் வழக்கத்திற்கு மாறாக சிறிய குறைபாடுள்ள கண்கள் மற்றும் விரல்கள் காணப்பட்டதாக்வும் நாசா தெரிவித்தது.

நாசா விஞ்ஞானி ஷானன் லூசிட்

இந்த சோதனை குறித்து விண்வெளிக்கு பயணம் சென்ற ஷானன் லூசிட் கூறுகையில், மிர் விண்வெளி நிலையத்தில் அடைகாக்கப்பட்ட கருக்களில் 13 சதவீதம் அசாதாரண விகிதத்தை கொண்டிருந்தது.

இது பூமியில் உள்ள கருக்களில் காணப்பட்ட விகிதத்தை விட நான்கு மடங்குக்கும் அதிகமாக இருந்தது.

இந்த அசாதாரண நிகழ்விற்கு, அடைகாப்பானுக்குள் இருந்த சற்றே உயர்ந்த வெப்ப நிலையும், விண்வெளி நிலையத்தில் கணிசமாக உயர்ந்த கதிர்வீச்சின் வெளிப்பாடுகளும் காரணமாக இருக்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த மாதிரியான ஆய்வுகள், எதிர்காலத்தில் பூமிக்கு அப்பால் உள்ள உயிர்களின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பதற்கான ஆய்வின் வெளிப்பாடாக இருந்ததாக நாசா தெரிவித்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com