எதிர்ப்பை மீறி தைவான் சென்றார் நான்சி பெலோசி - பதற்றம் அதிகரிப்பு

அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றுள்ளார்.அவரது இந்த பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
நான்சி பெலோசி
நான்சி பெலோசி
Published on

தைபே சிட்டி:

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சீனா தனது ஆதிக்கத்தை நிறுவ தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தைவானை சீனாவின் ஒரு அங்கமாகவும், அது தனி பிராந்தியம் இல்லை என்ற நிலைப்பாட்டையும் சீனா தொடர்ந்து உலக அரங்கில் அறிவுறுத்தியுள்ளது.

அதேவேளை, தைவான் பிராந்தியத்தின் தன்னாட்சி உரிமையை அமெரிக்கா துணை நின்று பாதுகாக்கும் என அமெரிக்க அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசியில் உரையாடிய சீன அதிபர் ஜி ஜிங்பிங், தைவான் விவகாரம் குறித்து சீனாவின் நிலைப்பாட்டை திட்டவட்டமாகக் கூறியுள்ளார். சீனாவின் ஓர் அங்கம் தான் தைவான், எனவே சீனாவின் இறையாண்மையைச் சீண்டும் செயல்களில் அமெரிக்கா ஈடுபடக் கூடாது என கேட்டு கொண்டார். தைவான் விவகாரத்தில் அமெரிக்கா நுழைவது நெருப்புடன் விளையாடுவதற்குச் சமம் என அவர் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே உக்ரைன் மீது ரஷியா ராணுவ நடவடிக்கை எடுத்து போர் தொடுத்துள்ள நிலையில், இதேபோன்ற ராணுவ நடவடிக்கையை தைவான் மீது சீனா எடுக்குமோ என்ற அச்சம் சர்வதேச அரங்கில் நிலவி வருகிறது.

இதற்கிடையே, அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகரான நான்சி பெலோசி ஆசிய நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தை நேற்று தொடங்கினார். தனது ஆசிய பயணத்தில் தைவான் நாட்டிற்கும் நான்சி செல்வார் என தெரிவிக்கப்பட்டது. நான்சி பெலோசியின் இந்த பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி நான்சி பெலோசி தற்போது தைவானுக்குச் சென்றுள்ளார். இதையடுத்து, தைவானில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com