

இந்த ஆண்டின் பகுதி சந்திர கிரகணம், இன்று இரவு தொடங்கி நாளை அதிகாலை வரை நடைபெற உள்ளது. சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வராமல், சந்திரன் பூமியின் நிழல் பகுதி வழியாக கடந்து செல்லும்போது இந்த பகுதி சந்திர கிரகணம் நிகழ்கிறது.
இந்த ஆண்டின் முக்கியமான வானியல் நிகழ்வுகளில் ஒன்றான பகுதி சந்திர கிரகணம், இன்று இரவு தொடங்கி நாளை அதிகாலை வரை நடைபெற உள்ளது. சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வராமல், சந்திரன் பூமியின் நிழல் பகுதி வழியாக கடந்து செல்லும்போது இந்த பகுதி சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த நிகழ்வின் போது, பூமியின் அடர்ந்த நிழல் சந்திரனை மறைப்பதால், நிலவின் பெரும்பகுதி சிவந்த தாமிர நிறத்தில் காட்சியளிக்கும்.
சர்வதேச நேரப்படி, நாளை அதிகாலை 02:33 மணிக்கு சந்திரன் பூமியின் முதன்மை நிழலுக்குள் நுழையத் தொடங்குகிறது. இதன் உச்சகட்ட நிகழ்வு அதிகாலை 04:12 மணி அளவில் ஏற்படும். இந்த உச்சகட்டத்தின் போது சந்திரனின் 96 சதவீத பகுதி பூமியின் நிழலால் மறைக்கப்பட்டு, ஒரு சிறிய பகுதி மட்டுமே சூரிய வெளிச்சத்தைப் பெறும். இந்த நிகழ்வு விண்வெளி பிரியர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் ஒரு சிறந்த காட்சியாக அமையும்.
இந்த சந்திர கிரகணத்தை மேற்கு ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் தெளிவாகக் காண முடியும். மேலும், அமெரிக்க கண்டங்களின் பெரும்பாலான பகுதிகளிலும் (ஹவாய் மற்றும் அலாஸ்காவின் சில பகுதிகளைத் தவிர) ஆப்பிரிக்க மண்டலங்களிலும் இதனைப் பார்வையிடலாம். இருப்பினும், இந்தியாவில் இந்த நேரத்தில் பகல் பொழுதாக இருப்பதால், இதனை இந்தியாவில் இருந்து நேரடியாகப் பார்க்க முடியாது.
சூரிய கிரகணத்தைப் போலல்லாமல், சந்திர கிரகணத்தைப் பார்ப்பதற்கு எந்தவொரு சிறப்பு பாதுகாப்புக் கண்ணாடிகளோ அல்லது கருவிகளோ தேவையில்லை என்று விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை வெறுங்கண்களால் பாதுகாப்பாகக் காண முடியும். இருப்பினும், தொலைநோக்கி அல்லது பைனாகுலர் போன்ற கருவிகளைப் பயன்படுத்திப் பார்க்கும்போது, நிலவின் மேற்பரப்பில் தோன்றும் தாமிர நிற மாற்றங்களை மிகவும் தெளிவாகவும் அழகாகவும் ரசிக்க முடியும்.