பள்ளி குழந்தைகளுக்கு இலவச காலை உணவு.. யூடியூபர் அறிவிப்புக்கு குவியும் பாராட்டுக்கள்

குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கையை குறைக்கும் என்று கூறப்படுகிறது.பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.
பள்ளி குழந்தைகளுக்கு இலவச காலை உணவு.. யூடியூபர் அறிவிப்புக்கு குவியும் பாராட்டுக்கள்
Published on: 

உலகளவில் மிகவும் பிரபலமான யூடியூபர்களில் ஒருவர் மிஸ்டர் பீஸ்ட். பல மில்லியன் ஃபாளோயர்களை கொண்டிருக்கும் மிஸ்டர் பீஸ்ட் தான் உருவாக்கும் வீடியோக்களால் பெரிதும் பாராட்டப்படுகிறார். யூடியூப் மட்டுமின்றி பல்வேறு செயல்களில் ஆர்வம் கொண்டவர் மிஸ்டர் பீஸ்ட் என்கிற ஜிம்மி டொனால்டுசன்.

அந்த வரிசையில், யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் தற்போது அறிவித்து இருக்கும் திட்டம் பெரும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. அதன்படி ஆப்பிரிக்கா பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்குவதாக மிஸ்டர் பீஸ்ட் அறிவித்துள்ளார். இவ்வாறு செய்வதன் மூலம் மேற்கத்திய ஆப்பிரிக்காவில் உள்ள கோகோ தோட்டங்களில் பணியாற்ற வைக்கப்படும் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கையை குறைக்கும் என்று கூறப்படுகிறது.

கோகோ தோட்டங்களில் பணியாற்றும் குழந்தைகளுக்கு காலை உணவு கிடைத்தால் அவர்கள் பள்ளுக்கு செல்வர் என்று டொனால்டுசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னதாக இவர் ஆப்பிரிக்க சமூகங்களின் வளர்ச்சியை முன்னிறுத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com