VIDEO- முதுகில் குழந்தையுடன் பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் தாய்: இணையத்தை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய வைரல் வீடியோ!

வேலை பளுவிலும் வாடிக்கையாளர்களிடம் அன்பாகப் பேசிப் பழகும் அவரது விதம் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.
WOMAN WITH HER CHILD
Published on: 

லடாக் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில், தனது பச்சிளம் குழந்தையைப் முதுகில் கட்டிக்கொண்டு பெட்ரோல் நிரப்பும் தாய் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகியுள்ளது. பிரியங்கா என்ற இன்ஸ்டாகிராம் பயனர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த இந்த வீடியோ, உலகம் முழுவதும் உள்ள பலரின் இதயங்களைத் தொட்டுள்ளதுடன், ஒரு தாயின் கடின உழைப்பையும் போராட்டத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

வைரலான அந்த வீடியோவில், பெட்ரோல் பங்கிற்கு வரும் வாகனங்களுக்குப் பெட்ரோல் நிரப்பியபடியே, தனது குழந்தையைப் பாதுகாப்பாக முதுகில் சுமந்தபடி அந்த தாய் இயல்பாகப் பணிபுரிவதைக் காண முடிகிறது. வேலை பளுவிலும் வாடிக்கையாளர்களிடம் அன்பாகப் பேசிப் பழகும் அவரது விதம் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

அருகில் இருக்கும் வாகனங்களையும், சுற்றியுள்ள உலகத்தையும் குழந்தை ஆச்சரியத்துடன் எட்டிப் பார்க்கும் காட்சியும், குழந்தையை வேலைக்கு அழைத்துச் செல்ல அனுமதித்த பெட்ரோல் பங்க் உரிமையாளரின் மனிதநேயமும் சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உதவியை நாடும் இணையவாசிகள்

இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து பரவியதை அடுத்து, பலரும் அந்தத் தாயின் சூழ்நிலை குறித்துக் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், இத்தகைய கடின உழைப்பாளித் தாய்க்கு எவ்வாறு உதவ முடியும் என்று பலரும் வினவி வருகின்றனர். இதற்கிடையே, அந்தத் தாயைத் தொடர்புகொண்ட பிரியங்கா, பொதுமக்களின் அன்பையும், நிதி மற்றும் உதவிகளை வழங்கத் தயாராக இருப்பவர்களின் விருப்பத்தையும் அவரிடம் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்கள் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல், இது போன்ற உழைக்கும் மனிதர்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தையும் வெளிச்சத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதை இந்தச் சம்பவம் நிரூபித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com