ஏவுகணை தாக்குதல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் 2 வர்த்தக கப்பல்கள் மூழ்கடிப்பு

கப்பலில் இருந்த 21 பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
ஹார்முஸ், ஏவுகணை தாக்குதல்
Published on: 
Summary

ஹார்முஸ் ஜலசந்தியில் கடந்த 24 மணி நேரத்தில் 2 கப்பல்கள் மூழ்கியுள்ளது.

சிங்கப்பூர்

சிங்கப்பூர் கொடியை ஏந்திய 'ஜிஎஃப்எஸ் பிரைட்' என்ற சரக்குக் கப்பல் நேற்று ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்றுகொண்டிருந்தபோது தாக்கப்பட்டது. தாக்குதலுக்குப் பிறகு, கப்பல் பலத்த சேதமடைந்து தீப்பிடித்து மூழ்கியது.

நல்லவேளையாக, கப்பலில் இருந்த 21 பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

சிங்கப்பூர் கடல்சார் ஆணையம், வர்த்தகக் கப்பல்கள் மீதான இந்தத் தாக்குதல்களை நியாயமற்றது என்றும் சர்வதேச சட்ட மீறல் என்றும் கூறி வன்மையாகக் கண்டித்துள்ளது.

கேப் டாவோ

மற்றொரு சம்பவத்தில், ஆன்டிகுவா மற்றும் பார்புடா கொடியை ஏந்திய 'கேப் டாவோ' என்ற சரக்குக் கப்பலும் ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் நேற்று முழுவதுமாக மூழ்கியது.

சர்வதேச கடல்சார் அமைப்பின் தரவுகளின்படி, செப்டம்பர் 23 அன்று ஏவுகணை ஒன்று கப்பலை தாக்கியதில் கப்பல் பணியாளர் உயிரிழந்தார்.

அதேசமயம் மீதமுள்ள பணியாளர்கள் சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

பல வாரங்களுக்குப் பிறகு கப்பல் நேற்று முழுமையாக மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணிவெடி தாக்குதல்

இதனிடையே நேற்று மற்றொரு சம்பவத்தில் 2500 டேங்கர்களை ஏற்றிவந்த வர்த்தக கப்பல் ஒன்று ஹார்முஸ் அருகே புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடியில் சிக்கி தீப்பிடித்து எரிந்து மூழ்கியதாக ஈரான் புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது.

இந்த கப்பல் எந்த நாட்டுடையது, அதில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் போர் தொடங்கியதில் இருந்து கண்ணிவெடியில் சிக்கி கப்பல் மூழ்குவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com