101வது நாளில் நடந்த திருப்பம்: இஸ்ரேலிய நகரங்கள் மீது ஏமனில் இருந்து ஹவுதிக்கள் ஏவுகணை மழை

டிரம்பை மீறி இஸ்ரேல் செயல்பட்டுள்ளது.
101வது நாளில் நடந்த  திருப்பம்: இஸ்ரேலிய நகரங்கள் மீது ஏமனில் இருந்து ஹவுதிக்கள் ஏவுகணை மழை
Published on

அமெரிக்கா ஏற்படுத்திய போர் நிறுத்தத்தை மீறி லெபனான் தலைநகர் பெய்ரூட் அருகே இஸ்ரேல் நேற்று வான்வழித் தாக்குதல் நடத்தியது.

முன்பிருந்தே இஸ்ரேலை எச்சரித்து வந்த ஈரான், நேற்று இரவு இஸ்ரேல் மீது 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. அதை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு தடுத்து அழித்தது.

ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்த வேண்டாம், அது ஈரானுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை எச்சரித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இஸ்ரேல் இதை மீறி இன்று அதிகாலை ஈரான் தலைநகர் தெஹ்ரான், இஸ்பஹான், தப்ரிஸ் உட்பட பல்வேறு நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனால் கடந்த ஏப்ரல் 8 அன்று இஸ்ரேல், அமெரிக்கா - ஈரான் இடையே எட்டப்பட்ட தற்காலிக போர் நிறுத்தம் மீறப்பட்டு நிரந்தர போர் நிறுத்தத்திற்கான சாத்தியக்கூறுகளையும் கேள்விக்குள்ளாக்கி உள்ளது.

இஸ்ரேலை லெபனானில் இருந்து ஹிஸ்புல்லாவும். ஈரான் ராணுவமும் நேற்று தாக்கிய நிலையில் இந்த வரிசையில் ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு இஸ்ரல் மீது இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலிய நகரங்களான டெல் அவிவ், ஜெருசலேமில் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன. சைரன் சத்தம் கேட்டுமக்கள் பாதுகாப்பு பங்கர்களை நோக்கி ஓடினர்.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய ஏவுகணையை இஸ்ரேலின் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்பு வானிலேயே வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தாக்குதலில் ஏவுகணைத் துண்டுகள் விழுந்து யாருக்கும் காயம் ஏற்பட்டவில்லை என்றும் உறுதோபடுத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் அபாயம் முழுமையாக நீங்கிவிட்டதால், பொதுமக்கள் தங்களது தற்காலிகப் புகலிடங்களில் இருந்து வெளியே வரலாம் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.

ஈரானைத் தொடர்ந்து ஹவுதிகளும் இஸ்ரேலை தாக்கத் தொடங்கியுள்ளதால் போரானது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. குறிப்பாக அமெரிக்க அதிபர் டிரம்பை மீறி இஸ்ரேல் செயல்பட்டுள்ளதால் அடுத்த என்ன நடக்கும் என்ற பதற்றம் எழுந்துள்ளது.

இன்றுடன் இஸ்ரேல், அமெரிக்கா - ஈரான் போர் தொடங்கி 101 நாட்கள் ஆகியுள்ளது.

ஈரானுடனான போரால் டிரம்ப் மீது அதிக அழுத்தம் ஏற்பட்டுள்ளதால் அவர் இப்போரை முடிவுக்கு கொண்டுவர கடுமையாக முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com