வங்க தேசத்தில் தட்டம்மை நோய் பாதிப்பால் 1,000 குழந்தைகள் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு

தட்டம்மை என்பது பாராமிக்சோ குடும்பத்தை சேர்ந்த வைரஸ் மூலம் காற்றில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
Bangladesh measles outbreak
Published on: 
Summary

வங்க தேசத்தில் குறைந்து வரும் தடுப்பூசி பயன்பாடு மற்றும் சுகாதார பாதுகாப்பில் உள்ள குறைபாடுகள் காரணமாக, தட்டம்மை நோயால் 1,100க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தட்டம்மை என்பது பாராமிக்சோ குடும்பத்தை சேர்ந்த வைரஸ் மூலம் காற்றில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருமும்போது, அது காற்றில் பரவி அருகில் உள்ள நபர்களை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.

வங்க தேசத்தில் மார்ச் மாதத்தில் இருந்து அக்டோபர் 9-ஆம் தேதி வரையில், 2,02,000 தட்டம்மை நோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும், அதில் 22,000-க்கும் அதிகமான தட்டம்மை நோய் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

குழந்தைகள் உயிரிழப்பு

மேலும் இந்த பாதிப்பின் மூலம், குறைந்தது 1,147 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 94 சதவீதம் பேர் (1,078 பேர்) ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் சுகாதார பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால், தடுப்பூசி செலுத்தும் அளவு குறைந்து வருகிறது.

வங்கதேச அரசு

இதுகுறித்து வங்கதேச தட்டம்மை மற்றும் ரூபெல்லா ஒழிப்புக்கான குழு தலைவர் மஹ்முதுர் ரஹ்மான் கூறுகையில், தயார்நிலை சோதனைகள் முறையாக செய்யப்படாதபோது, பெரும்பாலான அளவில் குழந்தைகளே தடுப்பூசியை பெற தவறியதாக தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பு

வங்க தேசத்தில் அதிகமாக பரவி வரும் தட்டம்மை நோய் தொற்று குறித்து உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசி ஆலோசகர் மார்க் ஜிட் கூறுகையில், “இது ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு உண்மையான எச்சரிக்கை.

ஒரு நெருக்கடிக்கு பதிலளிப்பதை விட, தடுப்பூசி மூலம் நோய் பரவலை தடுப்பது எளிதானது, மலிவானது மற்றும் பாதுகாப்பானது” என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com