நிலநடுக்கத்தால் உருவான ராட்சத இயற்கை ஏரி: அடுத்த 3 நாட்களில் மீண்டும் ஒரு பேரழிவு? நேபாளத்திற்கு சீனா எச்சரிக்கை!

சீன மற்றும் நேபாள எல்லையின் இருபுறமும் கிட்டத்தட்ட 900 வெளிநாட்டினர் உட்பட 1,300-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
நிலநடுக்கத்தால் உருவான ராட்சத இயற்கை ஏரி: அடுத்த 3 நாட்களில் மீண்டும் ஒரு பேரழிவு? நேபாளத்திற்கு சீனா எச்சரிக்கை!
Published on

நேபாளம் - திபெத் எல்லைப் பகுதியில் நிலச்சரிவு காரணமாக உருவான ஒரு தற்காலிக ஏரி அடுத்த 72 மணி நேரத்திற்குள் உடைந்து மீண்டும் ஒரு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்று சீனா, நேபாளத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, சோசென் கோலா மற்றும் புரேபு சாங்போ ஆறுகள் சங்கமிக்கும் இடத்திற்கு அருகில் நிலச்சரிவால் தண்ணீர் தடுக்கப்பட்டு, தனி ஏரிபோன்று உருவாகி அதில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது.

இதனை அறிவியலில் நிலச்சரிவு அணை எனக் குறிப்பிடுவர். நீரோட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் நிலநடுக்கத்தால் விழுந்த கற்கள், பாறைகள் நகர்ந்து, அடுத்த மூன்று நாட்களில் அந்த அணை அமைப்பு உடைவதற்கான அதிக அபாயத்தை கொண்டுள்ளதாக சீனா எச்சரித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி அந்த அணையின் மொத்த கொள்ளளவு 2 மில்லியன் கன மீட்டர் (70 மில்லியன் கன அடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த அணை “ஏற்கனவே நிரம்பி வழிகிறது” என சீன நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“அடுத்த மூன்று நாட்களில் மேலும் 3 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் ஏரிக்குள் பாயும் என எதிர்பார்க்கப்படுவதால், ஏரி உடைவதற்கான அதிக அபாயம் உள்ளது,” என அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இந்த இயற்கை அணை உடைந்தால், நேபாளத்தின் போதேகோஷி மற்றும் திரிசூலி ஆற்றங்கரைப் பகுதிகளில் மீண்டும் ஒரு பேரழிவு வெள்ளம் ஏற்படும்.

இமயமலையில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவினால் தூண்டப்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் சுமார் 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், சீன மற்றும் நேபாள எல்லையின் இருபுறமும் கிட்டத்தட்ட 900 வெளிநாட்டினர் உட்பட 1,300-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com