அமெரிக்காவில் ரூ.10 கோடி மதிப்புள்ள 6 காரட் மஞ்சள் வைரத்தை கண்டெடுத்த நபர்

அமெரிக்காவில் உள்ள பழங்கால எரிமலை குழியின் மீது கிரேட்டர் ஆஃப் டைமண்ட்ஸ் ஸ்டேட் பார்க் பூங்கா அமைந்துள்ளது.
Jack Pearadin uncovered a rare 6.03-carat yellow diamond
Published on: 
Summary

அமெரிக்காவில் உள்ள கிரேட்டர் ஆஃப் டைமண்ட்ஸ் பூங்காவிற்கு தனது நண்பருடன் சுற்றுலா சென்ற நபர் ஒருவர், சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான அரிய வகை மஞ்சள் நிற வைரத்தை கண்டெடுத்துள்ளார்.

கிரேட்டர் பூங்கா

அமெரிக்காவில் உள்ள பழங்கால எரிமலை குழியின் மீது கிரேட்டர் ஆஃப் டைமண்ட்ஸ் ஸ்டேட் பார்க் பூங்கா அமைந்துள்ளது.

இந்த பூங்காவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு 1,500 ரூபாய் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த பூங்காவில் அரிய வகையான வைர கற்களும், ரத்தின கற்களும் காணப்படுகிறது.

மேலும் இந்த பூங்காவிற்கு வருகை தரும் பயனர்கள், பூங்காவில் அவர்கள் கண்டெடுக்கும் ரத்தின கற்களை சட்டப்பூர்வமாக வைத்துக்கொள்ள உரிமை வழங்கப்படுகிறது.

மேலும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட உலகின் வைரம் காணப்படும் ஒரே இடமாகவும், கிரேட்டர் பூங்கா விளங்குகிறது.

சுற்றுலா வந்த நபர்

அந்த வகையில் கிரேட்டர் பூங்காவிற்கு தனது நண்பருடன் சுற்றுலா வந்த ஜாக் பியராடின் என்பவர் வைரங்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அமெரிக்காவை சேர்ந்த ஜாக், பல ஆண்டுகளாக கிரேட்டர் பூங்காவில் ரத்தின கற்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இதையடுத்து அவர் கடந்த மாதம் பூங்காவில் உள்ள சரளைக் கற்களை ஆராய்ந்து கொண்டிருந்த போது, நகத்தின் அளவில் ஒரு சிறிய மஞ்சள் நிறத்திலான வைரம் ஒன்று தென்பட்டுள்ளது.

இதை பார்த்த ஜாக், அதனை எடுத்துக்கொண்டு பூங்கா அதிகாரிகளிடம் காண்பித்துள்ளார். அப்போது அவர்கள் இந்த ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட வைரங்களில், இதுதான் மிகப்பெரியது என தெரிவித்துள்ளனர்.

ரூ.10 கோடி மதிப்பிலான 6.03 காரட் வைரம்

ஜாக் கண்டெடுத்த அரிய வகை மஞ்சள் நிற வைரத்தின் மதிப்பு சுமார் ரூபாய் 10 கோடி வரை இருக்கும் எனவும், அது 6.03 காரட் எடை கொண்டது எனவும் ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து இந்த வைரத்திற்கு ‘அமெரிக்கன் ட்ரீம்’ என பெயரிடப்பட்டுள்ளது.

2013-ஆம் ஆண்டு முதல் ஆய்வு

இதுகுறித்து ஜாக் கூறுகையில், தான் சுமார் எட்டு அடி தூரத்தில் இருந்தபோது, அங்கிருந்த சரளை கற்களின் குவியலில் பிரகாசமான ஒரு பொருளை பார்த்ததாக கூறினார்.

மேலும் 2013-ஆம் ஆண்டு முதல் கிரேட்டர் பூங்காவிற்கு சுற்றுலா சென்று வருவதாகவும், அரிய வகை கற்களின் மீதான ஆர்வம் அதிகரித்ததால் பூங்காவிற்கு அருகிலேயே குடிபெயர்ந்ததாகவும் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com