நிஜத்திலும் வில்லனாக நடிக்கும் வாலிபரின் வினோத விளம்பரம்

நாடகம் போன்று நடத்தி அதற்காக பணம் ஈட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளாராம். வார நாட்களில் ரூ. 1,975, வார இறுதி நாட்களில் ரூ. 2,963 வரை வசூலிக்கிறார்.
நிஜத்திலும் வில்லனாக நடிக்கும்  வாலிபரின் வினோத விளம்பரம்
Published on

சினிமாக்களில் நடிக்க வேண்டும் என்பது இளைஞர்கள் பலரது கனவாக உள்ளது. அதில், சிலர் வில்லனாக நடித்து புகழ் பெற வேண்டும் என ஆசைப்படுவார்கள். ஆனால் மலேசியாவை சேர்ந்த ஷாசாலி சுலைமான் (வயது 28) என்பவர் சினிமாவில் வருவது போல நிஜத்திலும் வில்லனாக நடித்து பணம் சம்பாதிக்கிறார். அதாவது காதலி மற்றும் மனைவி முன்பு தங்களை ஹீரோ போல காட்டிக்கொள்ள நினைப்பவர்கள் இவரை தொடர்பு கொள்ளலாம்.

உங்களுக்காக வில்லனாக மாற தயார் என்று விளம்பரம் செய்துள்ளார். காதலி மற்றும் கணவன் இல்லாத நேரத்தில் பெண்களை பின் தொடர்ந்து அவர்களுக்கு தொல்லை கொடுத்து பின்னர் கணவர் அல்லது காதலன் வரும் போது அவர்களிடம் அடி வாங்கி பெண்கள் முன்பு உங்களை ஹீரோவாக்கி கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

நாடகம் போன்று நடத்தி அதற்காக பணம் ஈட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளாராம். ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும் கூட தன்னை அணுகலாம் என கூறியுள்ள சுலைமான் இதற்காக கட்டணம் வசூலிக்கிறார்.

வார நாட்களில் ரூ. 1,975, வார இறுதி நாட்களில் ரூ. 2,963 வரை வசூலிக்கிறார். இவரது அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com