பிரிட்டனில் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்த வீடுகளின் விலை..!

லண்டன் வீட்டு விலைகள் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளதாக ரைட்மூவ் தெரிவித்துள்ளது.
London Real Estate
லண்டன் வீட்டு விலைகள் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு
Published on

பிரிட்டனில் ஆகஸ்ட் மாதத்தில் வீடுகளின் விலைகள் வழக்கத்தை விட மிகப்பெரிய அளவில் வீழ்ச்சியை கண்டுள்ளதாக ரைட்மூவ் என்ற சொத்து வலைதளம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் பதவியேற்ற பிறகு, பிரிட்டனில் புதிதாக பட்டியிலடப்பட்ட வீடுகளுக்கு முதலில் கேட்கப்படும் விலைகள் (asking prices) 2018-ஆம் ஆண்டிற்கு பிறகு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளதாகவும் அந்த வலைதளம் தெரிவித்துள்ளது.

சரசாசரி விற்பனை விலை வீழ்ச்சி

ஆகஸ்ட் 8 வரையிலான சராசரி விற்பனை விலைகள் 2.0 சதவீதம் சரிந்து காணப்படுகிறது. இது கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக ஏற்படும் 1.3 சதவீத வீழ்ச்சியை விட அதிகமான சரிவாக உள்ளது.

கோடைக்கால மந்தநிலை மற்றும் 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் விற்பனைக்கு உள்ள வீடுகள் ஆகியவை விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

லண்டன் வீடுகள் விலை

விற்பனைக்காக முதலில் கேட்கப்படும் விலைகள் ஓராண்டுக்கு முன்பு இருந்ததை விட 1.0 சதவீதம் குறைந்துள்ளது. இது டிசம்பர் 2023-ஆம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய வருடாந்தர வீழ்ச்சியாகும்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வீடுகளுக்கு முதலில் கேட்கப்படும் விலைகள் ஆண்டுக்கு 3.1 சதவீதம் சரிந்து, மிக கடுமையான வீழ்ச்சியை கண்டுள்ளன. ஆனால் இங்கிலாந்தின் வடக்கு பகுதிகளில் விலைகள் உயர்ந்து காணப்படுகின்றன.

இங்கிலாந்து பிரதமர்

ஜூலை 20 அன்று பர்ன்ஹாம் பிரதமராக பதவியேற்றதில் இருந்து, வீடு வாங்குபவர்களின் தேவை 5 சதவீதம் அதிகரித்துள்ளது.

இருந்தபோதிலும் இதன் தேவை ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 10 சதவீதம் குறைந்தே காணப்படுகிறது.

சராசரி இரண்டு வருடத்திற்கான வீட்டுக்கடனின் வட்டி விகிதம், ஒரு மாதத்திற்கு முன்பு இருந்த 4.92 சதவீதத்தில் இருந்து 5.09 சதவீதமாக உயர்ந்துள்ளது.

விலை வீழ்ச்சிக்கான காரணிகள்

உலகளவில் உள்ள அரசியல் நிச்சயமற்ற தன்மை, உயர்ந்த வீட்டு கடன் வட்டி விகிதங்கள் மற்றும் அக்டோபர் மாத நிதி நிலை அறிக்கை ஆகியவற்றால் ஏறபடும் அபாயங்களை கருத்தில் கொண்டு,

ரைட்மூவ் நிறுவனம் 2026-ஆம் ஆண்டில் விலை வளர்ச்சி 2 சதவீதமாக இருக்கும் என்ற கணிப்பை குறைத்து, விலை மாற்றமின்றி இருக்கலாம் அல்லது 2 சதவீதம் வரை வீழ்ச்சியடையலாம் என அறிவித்துள்ளது.

இந்த விலை வீழ்ச்சி கணிப்புகள் ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 8 வரை விற்பனைக்கு வைக்கப்பட்ட சொத்துக்களின் விலைகளை அடிப்படையாக கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com