'கச்சா பாதாம்' பாடலுக்கு நடனம் ஆடிய பாகிஸ்தான் சிறுவன்

திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் சிறுவனை ஆரவாரம் செய்து ஊக்குவிக்கிறார்கள். ஆர் வேர்ல்ட் போட்டோகிராபி என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோ 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
'கச்சா பாதாம்' பாடலுக்கு நடனம் ஆடிய பாகிஸ்தான் சிறுவன்
Published on

கடந்த ஆண்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய கச்சா பாதாம் பாடலுக்கு இந்தி பிரபலங்கள் முதல் வி.ஐ.பி.க்கள் பலரும் நடனம் ஆடி வீடியோக்களை வெளியிட்டிருந்தனர். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த வேர்க்கடலை வியாபாரியான பூபன் பத்யாகர் என்பவர் இந்த பாடலை பாடி இருந்தார். அவர் வியாபாரம் செய்த போது கச்சா பாதாம் என்ற பாடலை பாடி மகிழ்ந்துள்ளார். அதனை பார்த்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர அது உலக அளவில் வைரலாகி இருந்தது.

இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பாகிஸ்தானில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் ஒரு சிறுவன் கச்சா பாதாம் பாடலுக்கு நடனம் ஆடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் சிறுவனை ஆரவாரம் செய்து ஊக்குவிக்கிறார்கள். இதனால் அந்த சிறுவனும் உற்சாகமாக கச்சா பாதாம் பாடலுக்கு நடனம் ஆடுகிறார். ஆர் வேர்ல்ட் போட்டோகிராபி என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com