ரகசியங்கள் விற்பனை.. தேசத்துரோக வழக்கில் 80 வயதான உளவுத்துறை முன்னாள் தலைவர் கைது | Germany

ஹானிங் தனது சர்வதேச ஆலோசனை வணிகத்தின் ஒரு பகுதியாக இவற்றை பயன்படுத்தினார்
 ஆகஸ்ட் ஹானிங்
Published on: 
Summary

ஜெர்மனியின் உளவுத்துறை முன்னாள் தலைவர் தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெர்மனியின் உளவு அமைப்பான BND-யின் முன்னாள் தலைவரான 80 வயது ஆகஸ்ட் ஹானிங் தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்ஸ்டர் நகருக்கு அருகிலுள்ள நார்ட்வால்டேவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அவரை காவல்துறை கைது செய்தது.

அவருடன், BND-யின் மற்றொரு முன்னாள் உயர் அதிகாரியான மான்ஃபிரெட் டி. என்பவரும் பவேரியாவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

விசாரணை

இவ்விருவருக்கும் எதிரான விசாரணையை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முன்னெடுத்து வருகிறார்.

வெளிநாட்டு சக்திகளுக்கு ரகசியங்களை பணம் பெற்று கசியவிட்டதாக இவர்கள் மீது குற்றச்சாட்டு உள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வருகிறது.

மான்ஃபிரெட் டி. இடமிருந்து தகவல்களை பெற ஹேனிங் பணம் கொடுத்ததை விசாரணைக் குழு கண்டறிந்தது.

2010ம் ஆண்டில் இருந்து இருவரும் இந்த சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்று தெரிகிறது.

உயரதிகாரிகளில் இருந்து மத்திய அமைச்சர்கள் காரை மற்றும் நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்குள் தொடர்பில் இருக்க வேண்டிய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, உள்நாட்டு பயன்பாட்டிற்கான உளவு ஆவணங்களை அவர் இதுபோல் ஹேன்னிங்கிற்கு வழங்கி உள்ளார்.

விற்பனை

ஹானிங் தனது சர்வதேச ஆலோசனை வணிகத்தின் ஒரு பகுதியாக அந்தத் தகவல்களை விற்றதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் உள்ள உயர் அதிகாரிகளுடனும், கிரெம்ளினில் உள்ள மையங்களுடனும் அவருக்கு நெருங்கிய தொடர்புகள் இருந்ததாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

1998 முதல் 2005 வரை BNDயின் தலைவராகவும் ஜெர்மனியின் பாதுகாப்பு அமைப்புகளின் உயர்மட்டத் தலைவராகவும் பணியாற்றியவர் அகஸ்ட் ஹானிங்.

ஜெர்மனியின் பாதுகாப்பு அமைப்புகளின் நம்பகத்தன்மையையே கேள்விக்குள்ளாக்கும் இந்தச் சம்பவம், ஐரோப்பிய அரசியலில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com