மாஸ்கோவில் ஏ.ஐ. மாநாட்டில் ரஷிய அதிபர் புதினுடன் செல்பி எடுத்த கேரள சிறுவன்

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்த சர்வதேச ஏஐ மாநாட்டில் ரவுல் ஜான் அஜு கலந்து கொண்டார்.
Russia president Putin
Published on: 

கேரளாவை சேர்ந்த 17 வயது சிறுவனான ரவுல் ஜான் அஜு, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) கருவிகளை உருவாக்கியதற்காகவும், இந்த தொழில்நுட்பத்தில் பயிற்சி அளித்ததற்காகவும் பிரபலம் அடைந்தார்.

மேலும், அவர் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தைத் தொடங்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்தநிலையில் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்த சர்வதேச ஏஐ மாநாட்டில் ரவுல் ஜான் அஜு கலந்து கொண்டார்.

அப்போது அவர் ரஷிய அதிபர் புதினுடன் செல்பி எடுத்து கொண்டார். இதுதொடர்பாக ரவுல் ஜான் அஜு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

புதினுடன் செல்பி எடுத்ததை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை.சிறு வயதில் பொழுதுபோக்கிற்காக வீடியோக்களை உருவாக்கத் தொடங்கிய நான், இன்று 17 வயதில் அதிபர் புதினைச் சந்திக்கும் நிலைக்கு வந்துள்ளேன். கனவிலும் நினைத்திராத வாய்ப்புகளை வாழ்க்கை எனக்கு வழங்கியுள்ளது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X