

சமீபத்தில் பிரிட்டனின் பிரதமர் பதவியில் இருந்து விலகிய கெய்ர் ஸ்டார்மர், தற்போது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றப் பணிகளில் இருந்து விலகி, இனிவரும் காலங்களில் பாதுகாப்பு, அமைதி, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களில் தனது கவனத்தைச் செலுத்தப் போவதாக ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார்.
கெய்ர் ஸ்டார்மரின் இந்த திடீர் விலகல் முடிவைத் தொடர்ந்து, அவர் பிரதிநிதித்துவப்படுத்திய மத்திய லண்டன் நாடாளுமன்றத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.
கட்சிக்குள் ஏற்பட்ட கடுமையான அழுத்தங்கள் மற்றும் உள்நாட்டு அரசியல் குழப்பங்கள் காரணமாக ஸ்டார்மர் பதவி விலகியதைத் தொடர்ந்து ஆண்டி பர்ன்ஹாம் பிரிட்டன் பிரதமராக பதவியேற்றார்.
பிரதமர் பதவியில் இருந்து விலகி இருந்தாலும், அடுத்த பொதுத் தேர்தல் வரை தாம் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்வதாக அறிவித்திருந்தார். ஆனால் திடீரென்று அப்பதவியையும் ராஜினாமா செய்கிறார்.