கமலா ஹாரிஸ் தென்னை மரக் காமெடி .. இணையத்தைக் கலக்கும் பிரபல மீம் - வீடியோ

கமலா ஹாரிஸ் குறித்த பிரபலமான மீம் [MEME] ஒன்று தற்போது மீண்டும் டிரண்டாகத் தொடங்கியுள்ளது.கமலா ஹாரிஸ் கொகநட் மர மீம்கள் இணையத்தில் உலா வரத் தொடங்கின.
கமலா ஹாரிஸ் தென்னை மரக் காமெடி .. இணையத்தைக் கலக்கும் பிரபல மீம் - வீடியோ
Published on

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகியுள்ள நிலையில், இந்திய - ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பளராகி உள்ளார். இந்நிலையில் கமலா ஹாரிஸ் குறித்த பிரபலமான மீம் [MEME] ஒன்று தற்போது மீண்டும் டிரண்டாகத் தொடங்கியுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையில் வைத்து நடந்த ஹிஸ்பானிக் அமரிக்கர்களின் முன்னேற்றம் குறித்து நடந்த நிகழ்ச்சியில் பேசிய துணை அதிபர் கமலா ஹாரிஸ், 'எனது தாய் சில நேரங்களில் சொல்வதுண்டு, இந்த இளைய தலைமுறை பிள்ளைகளிடம் என்ன தவறு என்று எனக்குத் தெரியவில்லை, நீங்கள் எல்லோரும் எதோ தென்னை மரத்தில் இருந்து நேராக பூமியில் விழுந்தவர்கள் என்று நினைக்கிறீர்களா? என்று அவர் கேட்பதுண்டு' என்று சொல்லிவிட்டு சிரித்தார் கமலா ஹாரிஸ்.

அவர் பேசியது அப்போது டிரண்ட் ஆன நிலையில் கமலா ஹாரிஸ் கொகநட் மர மீம்கள் இணையத்தில் உலா வரத் தொடங்கின. தற்போது கமலா அதிபர்  வேட்பாளராகியுள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் இந்த மீமீக்களை பிரச்சார ஆயுதமாகியுள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com