யூத மக்களின் நினைவுகள் மீறல்... மன்னிப்பு கேட்ட பிரதமர்

ஜெலன்ஸ்கியுடன் வந்திருந்த 98 வயதான போர் வீரர் யாரோஸ்லாவ் ஹூன்கா கனடா பாராளுமன்றத்தில் கவுரவிக்கப்பட்டார்.கனடா பாராளுமன்றத்தை முழுவதுமாக தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது.
யூத மக்களின் நினைவுகள் மீறல்...  மன்னிப்பு கேட்ட பிரதமர்
Published on

ஒட்டாவா:

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த 22-ந்தேதி கனடா வந்திருந்தார். அவருடன் வந்திருந்த 98 வயதான போர் வீரர் யாரோஸ்லாவ் ஹூன்கா கனடா பாராளுமன்றத்தில் கவுரவிக்கப்பட்டார்.

இதனிடையே அவர் 2-ம் உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜிப் படையில் முக்கிய பொறுப்பு வகித்தவர் என்றும் லட்சக்கணக்கான யூத மக்கள் உயிரிழக்க காரணமானவர் எனவும் தகவல் பரவியது.

இதற்கு அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னிப்பு கோரியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், இந்த விவகாரம் கனடா பாராளுமன்றத்தை முழுவதுமாக தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த நிகழ்வுக்கு வருந்துகிறேன்.

அப்போதைய சூழலை அறியாமல் யூத மக்களின் நினைவுகளை மீறியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com