அணு ஆயுதங்களை பெற முயற்சிக்கும் ஈரானுக்கு எதிரான மிஷன் இன்னும் முடியவில்லை: இஸ்ரேல்

நாட்டின் பாதுகாப்புக்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தயங்கமாட்டோம்.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ்
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ்
Published on: 

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியில் மீண்டும் ஈடுபட்டு வருவதாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கை இன்னும் முழுமையடையவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெருசலேமில் நடைபெற்ற ராணுவ நினைவு நிகழ்ச்சியில் பேசிய காட்ஸ் ஈரான் தொடர்பாக கூறியதாவது:-

ஈரான் மீண்டும் அணு ஆயுதங்களைப் பெறுவதற்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. இது இஸ்ரேலின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள இஸ்ரேல் ராணுவம் தயாராக இருக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்புக்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தயங்கமாட்டோம்.

ஈரானின் நட்பு அமைப்பான ஹிஸ்புல்லா, இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும். காசா, லெபனான் மற்றும் சிரியாவில் உள்ள பாதுகாப்புப் பகுதிகளிலிருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறாது.

இவ்வாறு காட்ஸ் தெரிவித்தார்.

இதற்கிடையே, ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முயற்சிப்பதாக இஸ்ரேல் கூறும் குற்றச்சாட்டுகளை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

தேர்தலில் டிரம்ப், நெதன்யாகுவுக்கு பின்னடைவு

சமீபத்தில் இஸ்ரேலில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நெதன்யாகுவுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் இன்னும் ஆட்சி அமைக்கப்படவில்லை. இதேபோல் அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் டிரம்ப் கட்சி சரிவை சந்தித்துள்ளது.

இதனால் ஒருவேளை ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா உதவுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஏற்கனவே ஈரானுக்கு எதிரான போரால்தான் டிரம்ப் கட்சி தோல்வியைத் தழுவியதாக கூறப்படுகிறது.

X