‘இஸ்ரேலும், ஈரானும் உடனடியாக தாக்குதலை நிறுத்தவேண்டும்’ - ட்ரம்ப் பதிவு

லெபனான்மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல்மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது ஈரான்.
‘இஸ்ரேலும், ஈரானும் உடனடியாக தாக்குதலை நிறுத்தவேண்டும்’ - ட்ரம்ப் பதிவு
Published on

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளப் பக்கத்தில், “இஸ்ரேலும் ஈரானும் உடனடியாக பரஸ்பரத் தாக்குதல்களை நிறுத்த வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் எட்டப்பட்ட தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் கடுமையான ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள சூழலில் ட்ரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேலின் வடக்குப்பகுதியில் ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும் ஒரு வாரம் முழுவதற்குமான தொடர் தாக்குதல்களின் தொடக்கம் இது எனவும் ஈரான் தெரிவித்தது.

இஸ்ரேல்மீதான தாக்குதல்களின் பதிலடிதான், ஹிஸ்புல்லாவின் இலக்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் என இஸ்ரேல் அறிவித்தநிலையில், ஈரானின் தாக்குதல்களுக்கு பதிலடியாக அதன் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மீண்டும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதால் மத்திய கிழக்குப் பகுதியிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அதிபர் ட்ரம்பின் இந்தப் பதிவு வந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com