போரில் ஈரானின் வெற்றியை உலகமே ஒப்புக்கொண்டுள்ளது - ஈரான் அதிபர்

பொருளாதார டி-டே, அதாவது மிகக் கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கப்போவதாக டிரம்ப் மிரட்டியுள்ளார்.
டிரம்ப், மசூத் பெசெஷ்கியான்
டிரம்ப், மசூத் பெசெஷ்கியான்
Published on

அமெரிக்காவுடனான போரில் ஈரானின் வெற்றியை உலகமே ஒப்புக்கொண்டுள்ளதாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.

மசூத் பெசெஷ்கியான்

நேற்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆற்றிய உரையில்,

"ஈரானின் வெற்றியை உலக நாடுகள் ஏற்கனவே ஏற்றுக்கொண்டுவிட்டன. நமது பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா, உலகளவில் வெறுக்கப்படும் ஒரு நாடாக மாறியுள்ளது.

நமது பலத்தையும் சுயமரியாதையையும் தக்கவைத்துக்கொண்டுள்ள இந்தச் சரியான தருணத்திலேயே போரை முடிவுக்குக் கொண்டுவருவது நல்லது" என்று தெரிவித்துள்ளார்.

ஹார்முஸில் நிலவும் சர்வதேச நெருக்கடியைச் சமாளிக்கப் பிரான்ஸ் மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் சொந்தமாக மாற்றுத் திட்டங்களுடன் முன்னகர்ந்து வருகின்றன. இது ஈரானின் ராணுவ வெற்றிக்கு சான்றாக சர்வதேச ஊடகங்களால் பார்க்கப்படுகிறது.

பொருளாதார தடை

இதனிடையே ஈரான் மீதும் ஈரானுக்கு உதவும் நாடுகள் மீதும் பொருளாதார டி-டே, அதாவது மிகக் கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கப்போவதாக டிரம்ப் மிரட்டியுள்ளார்.

அமெரிக்க நிதித்துறைச் செயலர் ஸ்காட் பெசென்ட், இந்த பொருளாதார அழுத்தம் மூலம் ஈரான் அரசை முழுமையாக முடக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

ஈரான் போர் பின்னணி

ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதை எதிர்த்து இஸ்ரேலுடன் இணைந்து கடந்த பிப்ரவரி கடைசியில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை தொடங்கியது. முதல் நாள் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார்.

அழுத்தம்

இதைத்தொடர்ந்து மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை ஈரான் தாக்கியது. மத்திய கிழக்கில் இருந்து எண்ணெய், எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல்களை தடுத்து நிறுத்தியது. இதனால் உலகளவில் நெருக்கடி ஏற்பட்டதால் போரை நிறுத்த வேண்டும் என்ற அழுத்தம் அமெரிக்காவுக்கு அதிகரித்தது.

இருப்பினும் ஈரான் உடன்பாட்டுக்கு வர மறுப்பதால் போர் முடிவின்றி தொடர்ந்து வருகிறது. இடையில் ஏற்பட்ட போர் நிறுத்தமும் தோல்வியில் முடிந்தது.

இரு தரப்பு இடையே மறைமுக பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஈரானுக்கு பல்வேறு அழுத்தங்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் கொடுத்து வருகிறார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com