உணவு சாப்பிடுவதை ஸ்ட்ரீம் செய்த பிரபலம் - கியூ.ஆர்.கோடு மூலம் ரூ.11 லட்சம் மதிப்பிலான உணவுகளை ஆர்டர் செய்த நெட்டிசன்கள்

இணையவழி பிரபலமான லேசி என்பவர், ட்விட்ச் என்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் இணையதளம் மூலம் 40 லட்சம் பயனர்களை வைத்துள்ளார்.
American streamer lacy
Published on: 
Summary

ஜப்பானில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு உணவு சாப்பிட சென்ற இணைய பிரபலம் ஒருவர், தான் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுவதை லைவ்வாக வீடியோ எடுத்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்தபோது, ஹோட்டலில் இருந்த கியூ.ஆர்.கோடு மூலமாக சுமார் 11 லட்சம் மதிப்பிலான உணவுகளை பயனர்கள் ஆர்டர் செய்தனர்.

அமெரிக்காவை சேர்ந்த இணையவழி பிரபலமான லேசி என்பவர், ட்விட்ச் என்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் இணையதளம் மூலம் தனது அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை வீடியோவாக எடுத்து பதிவேற்றம் செய்து வருகிறார்.

இவரது கணக்கை சுமார் 40 லட்சம் பயனர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இவர் சமீபத்தில் ஜப்பானில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடுவதற்காக சென்று, உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.

அப்போது அவர் தான் உணவு சாப்பிடுவதை, டிவிட்ச் தளத்தில் லைவாக ஸ்ட்ரீமிங் செய்து பயனர்களுடன் உரையாடி வந்துள்ளார்.

இதையடுத்து அவரது மேஜையில் இருந்த கியூ.ஆர்.கோடு, போன் கேமராவில் பதிவாகி பயனர்களை சென்றடைந்தது.

இதை கவனித்த பயனர்கள், கியூ.ஆர்.கோடு மூலம் சுமார் 11 லட்சம் மதிப்பிலான உணவுகளை ஆர்டர் செய்தனர்.

இதையடுத்து இணைய பிரபலமான லேசி, உணவு சாப்பிட்டு கொண்டிருந்தபோது, வெய்ட்டர் ஒருவர் வந்து ரூபாய் 2 லட்சத்திற்கான ஒரு பில்லை கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து வந்த மற்ற வெய்ட்டர்களும் லேசியிடம் பல பில்களை காட்டியுள்ளனர். அப்போது தான் லேசிக்கு, தான் செய்த தவறு தெரியவந்துள்ளது.

இதையடுத்து லேசி, இணையதளத்தில் தனது பயனர்களுடன் ஏன் இவ்வாறு செய்தீர்கள் என கோபமடைந்தார்.

அப்போது அவர், நீங்கள் செய்த குறும்புத்தனமான காரியத்தால் சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான உணவுகள் வீணாகிவிட்டதாக பயனர்களிடம் கூறினார்.

இருப்பினும் அவர் இறுதியில் ஹோட்டல் உரிமையாளரிடம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுக்கான தொகையை தான் முழுவதுமாக வழங்குவதாக கூறினார்.

மேலும் ஹோட்டலுக்கு உணவு சாப்பிட வரும் ஏழ்மை குடும்பங்களுக்கு, ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளை வழங்குமாறும் ஹோட்டல் நிர்வாகத்திடம் லேசி கூறினார்.

தமிழகத்தில் சமீபத்தில் வீரமணி என்ற இன்ஸ்டா பிரபலம், தீபாவளிக்கு ஸ்வீட் பாக்ஸ் அனுப்புமாறு தனது வீட்டின் முகவரியை இணையத்தில் பகிர்ந்தார்.

அப்போது அவரது வீட்டின் முகவரிக்கு சுமார் 70 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை பயனர்கள் கேஷ் ஆன் டெலிவரி செய்தனர்.

இதைத்தொடர்ந்து தற்போது இதேபோன்ற ஒரு சம்பவம் ஜப்பானில் நிகழ்ந்து இணையத்தில் வைரலாகியுள்ளது.

X