சவுதி அரேபியாவுக்கான விமான சேவை நிறுத்தத்தை மேலும் நீட்டித்தது இண்டிகோ

சவுதி அரேபியாவில் உள்ள 4 விமான நிலையங்களுக்கான சேவை நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Indigo Flight
இண்டிகோ விமானம்
Published on: 
Summary

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, சவுதி அரேபியாவுக்கான விமான சேவைகள் நிறுத்தத்தை இண்டிகோ (IndiGo) நிறுவனம் மேலும் நீட்டித்துள்ளது.

அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான நிலை உருவானது. தற்போது போர் நடைபெறவில்லை, அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற தகவல் இருந்து வருகிறது. இதனால் விமான போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் இருந்த வண்ணமே உள்ளது. மேலும் சவுதி அரேபியா மீது ஹவுதி தாக்குதல் நடத்துகிறது.

பாதுகாப்பு சூழல் குறித்து ஆய்வு

இந்த நிலையில் ஜெட்டா மற்றும் மதினா நகரங்களுக்கான விமான சேவைகள் நவம்பர் 21-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல், ரியாத் மற்றும் தம்மாம் நகரங்களுக்கான விமான சேவைகள் நவம்பர் 30-ம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளன என்று இண்டிகோ தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு சூழல் குறித்த நீண்ட ஆய்வுக்குப்பின் பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹவுதி தாக்குதல்

அமெரிக்கா- ஈரான் இடையிலான போரை தவிர்த்து சவுதி அரேபியாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுடனான மோதல் மற்றும் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல்கள் காரணமாக பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் விமானப் போக்குவரத்திலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு அறிவுரை

விமான டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. டிக்கெட் ரத்து, பணத்தைத் திரும்பப் பெறுதல் அல்லது மாற்று பயண ஏற்பாடுகள் குறித்து நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம். விமான நிலையத்திற்கு செல்வதற்கு முன்பு பயண அட்டவணையை உறுதி செய்துகொள்ள வேண்டும். மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்புச் சூழலைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், நிலைமைக்கு ஏற்ப அடுத்தகட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் இண்டிகோ தெரிவித்துள்ளது.

X