கனடாவில் வாடகைக்கு இருப்பவர் மாட்டிறைச்சி சமைப்பதை எதிர்த்த இந்திய வம்சாவளி வீட்டு உரிமையாளர் கைது

வீட்டுத் தோட்டத்தில் வைத்து பாார்பிக்யூ சமையல் செய்துள்ளார்.
கனடாவில் வாடகைக்கு இருப்பவர் மாட்டிறைச்சி சமைப்பதை எதிர்த்த இந்திய வம்சாவளி வீட்டு உரிமையாளர் கைது
Published on
Summary

கனடாவில் இந்திய வம்சாவளி வீட்டு உரிமையாளர், தன் வீட்டில் வாடகைக்கு இருப்பவர் மாட்டிறைச்சி சமைப்பதை எதிர்த்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜ் திவானா என்ற பெண்மணி தனது வீட்டை ஒருவருக்கு வாடைகைக்கு விட்டுள்ளார்.

வாடகைக்கு இருப்பவர் அண்மையில் வீட்டுத் தோட்டத்தில் வைத்து பாார்பிக்யூ சமையல் செய்துள்ளார். இது இறைச்சியை ஒரு வகையாக வாட்டும் முறை. அவர்கள் மாட்டிறைச்சியை அவ்வாறு பார்பிக்யூ செய்துகொண்டிருந்தபோது ராஜ் திவானா அங்கு வந்துள்ளார்.

தனது இடத்தில் மாட்டிறைச்சி சமைக்கக் கூடாது எனக் கூறி அவர்களைத் தடுத்துள்ளார்.

வீடியோ

இது தொடர்பான வீடியோவில், ராஜ் திவானா பார்பிக்யூவில் வைக்கப்பட்டிருந்த உணவை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவதும், தனது இடத்தில் அதை சமைக்க அனுமதிக்க முடியாது என எச்சரிப்பதும் பதிவாகியுள்ளது.

வாடகைக்கு இருப்பவருக்கும் அவரும் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதை வாடகைக்கு இருப்பவரின் நண்பர் தனது கைபேசியில் படம்பிடித்துள்ளார்.

குற்றச்சாட்டு

வீசம்பவத்திற்குப் பிறகு, வாடகைக்கு இருக்கும் அந்த நபர் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவேற்றி ராஜ் திவானா தனது அனுமதி இன்றி வாடகை வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், கை கலப்பு செய்ததாவும் குறிப்பிட்டார்.

தான் வீட்டில் இல்லாத நேரத்தில் திவானா வீட்டிற்குள் நுழைந்து கதவின் பூட்டுகளை மாற்றித் தனக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகவும் வாடகைதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

கைது

வாடகைதாரரின் புகாரை தொடர்ந்து கனடா காவல்துறையினர், ராஜ் திவானாவை அதிரடியாக கைது செய்து அழைத்துச் சென்றனர். அவரை கைவிலங்கிட்டு போலீசார் அழைத்துச் செல்லும் வீடியோ வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com