பெரு நாட்டில் இந்திய வாலிபர் மீது துப்பாக்கி சூடு

துப்பாக்கி சூட்டில் விஜய் பக்ரானி, நடாலி மிராண்டா காயம் அடைந்தனர்.
gun shot
Published on: 

தென் அமெரிக்க நாடான பெருவில் இந்தியாவை சேர்ந்த விஜய் பக்ரானி இசா (வயது 29) ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் தங்க கட்டிகளை காரில் ஏற்றி கொண்டு ஜார்ஜ் சாவேஸ் சர்வதேச விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.

அவருடன் பெருவை சேர்ந்த மாரி நடாலி மிராண்டா எஸ்பினோசா என்ற பெண்ணும் பயணம் செய்தார். அந்த கார் தலைநகர் லிமாவிற்கு அருகே கல்லாவோ என்ற பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றபோது ஒரு கும்பல் வழிமறித்தது.

அந்த கும்பல், தங்க கட்டிகள் இருந்த கார் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. பின்னர் தங்க கட்டிகளை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றது.

இந்த துப்பாக்கி சூட்டில் விஜய் பக்ரானி, நடாலி மிராண்டா காயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களின் நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த கொள்ளை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X