ஹவுதி தாக்குதல் காரணமாக சவுதிக்கான விமான சேவைகளை ரத்து செய்த இந்திய விமான நிறுவனங்கள்

விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்தது.
File Pic: Flights
Published on: 

வளைகுடா நாட்டில் உருவாகி வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் இந்தியா மற்றும் ஆகாசா ஏர் ஆகிய நிறுவனங்கள், சவுதி அரேபிய நகரங்களை இணைக்கும் விமான சேவைகளை அக்டோபர் 17 வரை ரத்து செய்வதாக அறிவித்தன.

சமீப நாட்களாக சவுதி அரேபியாவில், ரியாத் விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல்கள் நடந்துள்ளன. சவுதி அரேபியாவில் உருவாகி வரும் சூழ்நிலை காரணமாக, ரியாத், ஜித்தா, தம்மாம் மற்றும் மதீனாவிற்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமான சேவைகள் அக்டோபர் 17 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளது.

முழு பணமும் திரும்ப வழங்கப்படும்:

பிராந்தியத்தில் உருவாகி வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தம்மாம், ஜித்தா மற்றும் ரியாத் ஆகிய இடங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமான சேவைகளை அக்டோபர் 17 வரை ரத்து செய்துள்ளோம்.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு, பயணத்தை இலவசமாக மாற்றி அமைத்து கொள்ளும் வசதியோ அல்லது ரத்து செய்தால் முழு பணமும் திரும்ப வழங்கப்படும். நாங்கள் நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்," என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரியாத், தம்மாம் மற்றும் ஜித்தாவுக்கான விமான சேவைகள் அக்டோபர் 17 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவித்த ஏர் இந்தியா, பாதுகாப்பான செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்காக அப்பகுதியில் நிலவும் சூழல்களை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

எக்ஸ் தள பதிவு:

எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், பாதிக்கப்பட்ட பயணிகள் பயணத்தை ரத்து செய்தால் முழு பணத்தையும் திரும்ப தருவதாக அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு சூழல் மற்றும் பாதுகாப்பான விமான போக்குவரத்துக்கு அதனால் ஏற்படும் அபாயங்களை கருத்தில் கொண்டு, ரியாத் மற்றும் ஜித்தாவுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் அனைத்து விமான சேவைகளை அக்டோபர் 17 வரை நிறுத்தி வைத்துள்ளதாக ஆகாசா ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com